லியன ‘கள்’ என்னும் இடைச் சொல்லொடு கூடியவழி, ளகாரஈறுபோல ஈற்றயல் நீண்டு, ‘தமர்காள்! நமர்காள்! எனவும், ‘நமரங்காள்!’எனப் பெயர்த்திரி சொல்லாய்த் திரிந்து நின்றும் விளி ஏற்பனவுங்கொள்க. ‘எம்பி’ என்னுங் கிளைநுதற் பெயரைத் தன்னினம் முடித்தலாற் கொள்க. (37)
விளிமரபு முற்றிற்று.