|
பெயரியல்
|
|
நால்வகைச் சொற்கும் பொது இலக்கணம்
|
|
157.
|
எல்லாச் சொல்லும் பொருள்குறித் தனவே. |
|
என்பது சூத்திரம். இவ்வோத்து, பெயர்க்கு இலக்கணம் உணர்த்தினமையாற் பெயரியல் என்னும் பெயர்த்தாயிற்று. இது முதல் ஐந்து சூத்திரமும் பொது இலக்கணங் கூறுதலின், வேற்றுமை இலக்கணத்தைச் சேர முன் வைத்தார். இச்சூத்திரம், நால்வகைச் சொற்கும் பொது இலக்கணங் கூறுகின்றது.
|
(இ-ள்.) எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே-பெயர்ச்சொல்லும் வினைச்சொல்லும் இடைச்சொல்லும் உரிச்சொல்லுமாகிய எல்லாச் சொல்லும் பொருளுணர்த்துதலைக் கருதியே நிற்கும்; பொருளுணர்த்துதலைக் கருதாது நிற்பன இல்லை, எ-று.
|
‘எல்லாச் சொல்லும் பொருள்குறித் தனவே’ என்றது, இவ்வாள் வெட்டுதலைக் கருதியே இருக்கும் என்றாற்போலக் கருவிக்கருத்தாவாய் நின்றது. ‘ஆயிரு திணையின் இசைக்குமன் சொல்லே’ (1) என்புழி இருதிணைப் பொருளையுஞ் சொற்கள் உணர்த்தும் என்பதன்றித் தமிழ்ச்சொல் லெல்லாம் ஒருதலையாகப் பொருளுணர்த்தும் என்னுந் துணிபு விதி ஆண்டின்மையின், இச்சூத்திரங் கூறினார்.
|
தாஞ் சார்ந்த சொற்களின் பொருளையுணர்த்தியும் அச்சொற்களை அசைத்தும் நிற்றலின், அசைநிலையும் பொருள் குறித்தனவேயாம்.
|
சொற்கள் ஓசை நிறைந்துநின்றே பொருளுணர்த்த வேண்டுதலின், இசைநிறையும் பொருள் உணர்த்திற்றேயாம்.
|
முயற்கோடு, பொய்ப்பொருள் குறித்ததாம், இல்லையென வருத
|
 |