என்றாற் போல்வனவும் ஆகுபெயராய்
வருவனவுங் குறிப்பின் தோன்றலாம்.
சேனாவரையர் காட்டிய,
‘இளைதாக முண்மரம் கொல்க களையுநர்
கைகொல்லுங் காழ்த்த விடத்து.’
(குறள். 879)
என்னும் உதாரணஞ் செய்யுளாதலின், செய்யுளியலில்
‘சொல்லொடுங் குறிப்பொடும் முடிவுகொள் இயற்கை
புல்லிய கிளவி எச்சம் ஆகும்.’
(செய்.206)
என்னுஞ் சூத்திரத்துள் ஆசிரியர் ‘குறிப்பெச்சம்’ எனக் கூறியவாறு காண்க. (3)
164 தொல்.சொல்.நச்.
சொற்களின் பாகுபாடு
160.
சொல்லெனப் படுப பெயரே வினையென்று
ஆயிரண் டென்ப அறிந்திசி னோரே.
இஃது, அந்நால்வகைச் சொல்லினுட் சிறந்தவற்றிற்குப் பெயரும் முறையுந் தொகையும் உணர்த்துகின்றது.
(இ-ள்) சொல்லெனப் படுப-‘சொல்’ என்று சிறப்பித்துச் சொல்லப் படுவன, பெயரே வினை என்று ஆயிரண்டு என்ப அறிந்திசினோரே - பெயர்ச்சொல்லும் வினைச்சொல்லும்
என அவ்விரண்டு என்று கூறுவர் அறிந்தோர், எ-று.
பொருளும் பொருளினது புடைபெயர்ச்சியுமாகிய முறைமை பற்றிப் பெயரை முற்கூறினார். (4)
இடைச்சொல்லும் உரிச்சொல்லும்
161. இடைச்சொற் கிளவியும் உரிச்சொற் கிளவியும்
அவற்றுழி மருங்கின் தோன்றும் என்ப.
இஃது, இறந்தது காத்தது.
(இ-ள்.) இடைச்சொற் கிளவியும் உரிச்சொற் கிளவியும் அவற்றுவழி மருங்கின் தோன்றும் என்ப-இடைச்சொல்லாகிய சொல்லும் உரிச்சொல்லாகிய சொல்லும் பெயர்வினைகளிடத்துத் தாம் தோன்றுதற்கு இடமாகிய இடத்தே தோன்றும் என்று கூறுவர் ஆசிரியர், எ-று.
தாம் தோன்றுதற்கு இடமாவன, அவன், அவள், உண்டான், உண்டாள்;
|