உரியவாம்,’ என்றுங் கொள்க.
(எ-டு.) ‘நஞ்சுண்டான் சாம்,’ என்றவழி, நஞ்சுண்டல் சாதற்குக் காரணம் என்பான், ஒரு பால்மேல் வைத்துக் கூறினானாயினும், அஃது ஒழிந்த நான்கு பாற்கும் சாதல் எய்தினமையை உணர்த்தினவாறு காண்க. ‘பார்ப்பான்கள் உண்ணான்,’ என்பது, ஏனைய இருபாற்கும் எய்துவித்து நின்றது.
இனிச் சேனாவரையர், ‘இரு திணைப் பிரிந்த ஐம்பாற் கிளவியாதற்கும் பெயருள் உரியன உரியவாம்,’ என்று பொருள் கூறி, ‘அவன், பெண் மகன், சாத்தன் என னகர ஈறு ஆடூஉவிற்கும் மகடூஉவிற்கும் அஃறிணைப் பாற்கும் உரித்தாய் வருதலின், ‘உரியவை உரிய’ என்றார் என்பது இச்சூத்திரத்திற்குக் கருத்து,’ என்றாராலெனின், ஆசிரியர் வினைச்சொல்லை ஈற்றான் அடங்கு மென்று கருதி ஈறுபற்றி ஓதிப், பெயர்ச்சொல்லை ஈற்றானடங்காது பல்வேறு வகையவாய் வருமென்று கருதிச் சொல்லாகத் தனித்தனியே எடுத்து ஓதினாராதலின், இவ்வெடுத்தோதிய சொற்களான் இவர் கூறிய பொருள் விளங்குதலின், இச்சூத்திரத்திற்கு இதுவே பொருளென்று உணர்க. அன்றியும்
‘ஒருபாற் கிளவி எனைப்பாற் கண்ணும்
வருவகை தானே வழக்கென மொழிப.’ (28)
என்னும் பொருளியற்சூத்திரத்தான் ‘நஞ்சுண்டான் சாம்,’ என்பது அடங்கும் என்று கூறல் அச்சூத்திரத்தின் கருத்து அறியாது கூறிற்றாம்; என்னை? அஃது, ‘ஒத்த கிழவனும் கிழத்தியும்’ (கள. 2) என்ற களவியற் சூத்திரத்திற் பன்மை கூறா வழுவை அமைத்தற்கு எழுந்த சூத்திரமாதலின். (7)
உயர்திணைப் பெயர்கள்
164. அவ்வழி,
அவன்இவன் உவனென வரூஉம் பெயரும்
அவள்இவள் உவளென வரூஉம் பெயரும்
அவர்இவர் உவரென வரூஉம் பெயரும்
யான்யாம் நாமென வரூஉம் பெயரும்
யாவன் யாவள் யாவ ரென்னும்
ஆவயின் மூன்றோ டப்பதி னைந்தும்
பா
|