(இ-ள்.) ஆண்மை அடுத்த மகன் என் கிளவியும் - ஆளும் தன்மை அடுத்த ஆண்மகன் என்னுஞ் சொல்லும், பெண்மை அடுத்த மகள் என் கிளவியும் - கட்புலன் ஆயதோர் அமைதித் தன்மை அடுத்த பெண்மகள் என்னுஞ் சொல்லும், பெண்மை அடுத்த இகர இறுதியும் - கட்புலன் ஆயதோர் அமைதித் தன்மை அடுத்த இகர ஈற்றுப் பெண்டாட்டி என்னுஞ் சொல்லும், நம் ஊர்ந்து என வரூஉம் இகர ஐகாரமும் - நம் என்னும் முதல் நிலையை ஊர்ந்து நமக்கு இன்னார் என வரூஉம் இகர ஐகார ஈற்று நம்பி, நங்கை என்னுஞ் சொல்லும், முறைமை சுட்டா மகனும் மகளும்- முறைப் பொருண்மை கருதாத மகன், மகள் என்னுஞ் சொல்லும், மாந்தர் மக்கள் என்னும் பெயரும்-மாந்தர், மக்கள் என்னும் பன்மைச் சொல்லும், ஆடூஉ மகடூஉ ஆயிரு கிளவியும் - ஆடூஉ, மகடூஉ ஆகிய அவ்விரு வகைச் சொல்லும், சுட்டு முதல் ஆகிய அன்னும் ஆனும்-சுட்டெழுத்தை முதலாக உடைய அவ்வாளன், இவ்வாளன், உவ்வாளன், அன்னன், அனையன் என்னும் அன் ஈற்றுச் சொல்லும், அம்மாட்டான், இம்மாட்டான், உம்மாட்டான், அன்னான், அனையான் என்னும் ஆன் ஈற்றுச் சொல்லும், அவை முதலாகிய பெண்டு என் கிளவியும் - அச் சுட்டெழுத்தினை முதலாக உடைய அப்பெண்டு, இப்பெண்டு, உப்பெண்டு என்னுஞ் சொல்லும், ஒப்பொடு வரூஉம் கிளவியொடு தொகைஇ-ஒப்புமைப் பொருள்பற்றி வரும் பொன் அன்னான், பொன் அன்னான், பொன் அன்னார் என வருஞ் சொல்லொடு தொக்கு, அப்பதினைந்தும் அவற்றோ ரன்ன - அப் பதினைந்து
|