|
பெயர்ச்சொல்லும் முற்கூறிய பெயர் போலப்போல் அறிய வந்த உயர்திணைப் பெயராம், எ-று.
|
‘ஆண்மை, பெண்மை’ என்பனவற்றிற்கு இவ்வாறு பொருள் உரையாக்கால், கூறியது கூறலாம். இவை, ‘ஆளும் மகன் - ஆண்மகன், பெண்ணாகிய மகள் - பெண்மகள்’ என விரியும். பெண்டாட்டி - பெண்மையை ஆள்கின்றவள். நம்பி, நங்கை-உயர் சொல். ‘மகள்’ என்பது, பிரியாது ஒரு சொல்லாயே நின்று பெண்மை உணர்த்திற்று.
|
‘பெண்டன் கிளவி’ என்று பாடம் ஓதி, ‘அவ்வாட்டி, இவ்வாட்டி, உவ்வாட்டி’ என்பாரும் உளர்.
|
‘ஊரார் பெண்டென மொழிய’(ஐங். 113)‘என்னைநின், பெண்டெனப் பிறர்கூறும் பழிமாறப் பெறுகற்பின்’ (கலி. 77: 10,11) எனச் சான்றோர் கூறலின், ‘பெண்டு’ என்பதே பாடம். ‘அப்பெண்டு’ என்னுஞ் சுட்டு, ‘கடிசொல் இல்லை’ (452) என்பதனான், ‘பெண்டு’ என நின்றது. (9)
|
உயர்திணை ஒருபாற்பெயர்
|
166.
|
எல்லாரு மென்னும் பெயர்நிலைக் கிளவியும்
|
எல்லீரு மென்னும் பெயர்நிலைக் கிளவியும்
|
பெண்மை அடுத்த மகனென் கிளவியும்
|
அன்ன வியல என்மனார் புலவர்.
|
இதுவும், உயர்திணை ஒருபாற்பெயர் உணர்த்துகின்றது.
|
(இ-ள்.)
எல்லாரும் என்னும் பெயர்நிலைக் கிளவியும்-எல்லாரும் என்று சொல்லப்படுகின்ற படர்க்கைப் பெயர்ச் சொல்லும், எல்லீரும் என்னும் பெயர்நிலைக் கிளவியும்-எல்லீரும் என்று சொல்லப்படுகின்ற முன்னிலைப் பெயர்ச்சொல்லும், பெண்மை அடுத்த மகன் என் கிளவியும் - கட்புலன் ஆயதோர் அமைதித் தன்
|
 |