நச்சினார்க்கினியர் உரை - சொல்லதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   618
Zoom In NormalZoom Out


 

களும், கூடி வரு வழக்கின் ஆடு இயல் பெயரே-இளந்துணை மகார்
தம்மிற்கூடி   விளையாடல்  குறித்த  பொழுதைக்குத்  தாமே  படைத்
திட்டுக்   கொண்ட  பெயர்களும்,  இன்றிவர்  என்னும்  எண்  இயல்
பெயரோடு  -  இத்துணையார்  எனத்  தமது வரையறை உணர நின்ற
எண்ணாகிய இயல்பு பற்றிப் பொருள் உணர்த்தும் பெயருடனே, அன்றி
அனைத்தும்  அவற்று  இயல்பினவே  - அவ்வனைத்துப் பெயர்களும்
மேற்கூறிய   பெயர்கள்   போலப்   பால்  அறியவந்த  உயர்திணைப்
பெயராம், எ-று.
 

(எ-டு.)  ‘அருவாளன், சோழியன்’ எனவும்; ‘சேரமான், மலையமான்,
பார்ப்பார்,  அரசர்,  வாணிகர்,  வேளாளர்,  எனவும்;  ‘அவையத்தார்
அத்தி  கோசத்தார், வணிக கிராமத்தார், மாகத்தார் எனவும்; ‘வருவார்,
செல்வார்,  தச்சர்,  கொல்லர்,  தட்டார்,  வண்ணார்’ எனவும்; ‘அம்பர்
கிழான்,  பேரூர்  கிழான்,  குட்டுவன்,  பூழியன், வில்லவன், வெற்பன்,
சேர்ப்பன்’ எனவும்; ‘கரியான், கரியாள், செய்யான், செய்யாள்’ எனவும்;
‘தந்தையார்,  தாயர்’  எனவும்;  ‘பெருங்காலர்,  பெருந்தோளர், அலை
காதர்’  எனவும்;  ‘குறவர்,  இறவுளர்,  வேட்டுவர், ஆயர்,  பொதுவர்,
நுளையர்,  திமிலர், பரதவர், களமர், உழவர், எயினர், மறவர்’ எனவும்;
‘பட்டி  புத்திரர், கங்கை மாத்திரர்’ எனவும்; ‘ஒருவர், இருவர் முப்பத்து
மூவர்’ எனவும்; ‘அருவாட்