டி, சோழிச்சி, மலையாட்டிச்சி, பார்ப்பனி,
அரசி, வாணிச்சி, வெள்ளாட்டிச்சி, கொல்லிச்சி, தட்டாத்தி, வண்ணாத்தி,
அம்பருடைச்சி, பேரூர் கிழத்தி’ எனவும் வரும்.
மகடூஉப் பெயர்கள், டகர ஒற்று இரட்டியும், ‘இச்சுப்’ பெற்றும், தகர ஒற்று இரட்டியும், இரண்டு இடைநிலை எழுத்துக்களைப் பெற்றும், பெறாதும் வருமாறு உணர்க. இவை இங்ஙனம் இடைநிலை எழுத்துக்களும் பெற்றுப் பால் உணர்த்துதற்கு உரிய இகரமும் பெற்று நிற்குமென்பது, ‘சொல்வரைந் தறியப் பிரித்தனர் காட்டல்’ (463) என்னும் அதிகாரப் புறனடையாற் கொள்க.
உயர்திணைப் பெயர்க்குப் புறனடை
168.
அன்ன பிறவும் உயர்திணை மருங்கின்
பன்மையும் ஒருமையும் பாலறி வந்த
என்ன பெயரும் அத்திணை யவ்வே,
இஃது, உயர்திணைப் பெயர்க்குப் புறனடை கூறுகின்றது.
(இ-ள்.) பிறவுமாயுள்ள,
உயர்திணை மருங்கின் பன்மையும்
ஒருமையும் அறி வந்த என்ன பெயரும் -
உயர்திணைக்கண் பன்மையும்
ஒருமையுமாகிய பால்களை அறிய வந்த எல்லாப் பெயர்களும்,
அத்திணையவ்வே - அவ்வுயர்திணைப் பெயராம், எ-று.
(எ-டு.) அன்னள், அனையாள், அவ்வாட்டி, ஏனாதி, காவிதி, எட்டி, வாயிலான், பூயிலான், வண்ணத்தான், சுண்ணத்தான், பெண்டிர், பெண்டுகள், அடியான், அடியாள், அடியார், வேனிலான், பிறன், பிறள், பிறர், மற்றையான், மற்றையாள், மற்றையார் என்னுந் தொடக்கத்தன எனக் கொள்க. இன்னும்,
‘எல்லேம் பிரியற்கெஞ் சுற்றமொ டொருங்கே’ (பரி. திரட்டு)
‘வல்லேம் இருந்தேமே வாய்ந்தமன் றிதுவென.’
‘இருவேமும் வல்லேம் இருவர்நம் படர்தீர.’
என்னும் பெயர்களுங் கொள்க. (12)
அஃறிணைப் பெயர்கள்
அதுஇது உதுவென வ
|