169.
வரூஉம் பெயரும்
அவைமுத லாகிய ஆய்தப் பெயரும்
அவை இவை உவையென வரூஉம் பெயரும்
அவைமுத லாகிய வகரப் பெயரும்
யாதுயா யாவை என்னும் பெயரும்
ஆவயின் மூன்றோ டப்பதி னைந்தும்
பாலறி வந்த அஃறிணைப் பெயரே.
இது, முறையானே அஃறிணைப்பெயர் கூறுகின்றது.
(இ-ள்.)
அது இது உது என வரூஉம் பெயரும்- அது, இது உது என்று சொல்லப்பட்டு வருஞ் சுட்டு முதற்பெயர்களும், அவை முதல் ஆகிய ஆய்தப் பெயரும் - அப்பெயர்க்கு முதலாகிய சுட்டெழுத்தே தமக்கு முதலாக ஆய்தத்தொடு கூடி அஃது, இஃது, உஃது என்று சொல்ல வரும் ஆய்தத் தொடர்மொழிக் குற்றுகரஈற்றுப் பெயர்களும், அவை இவை உவை என வரூஉம் பெயரும்-அவை, இவை, உவை என வருஞ் சுட்டு முதற்பெயர்களும், அவை முதல் ஆகிய வகரப் பெயரும்- அப்பெயர்க்கு முதலாகிய சுட்டெழுத்தே தமக்கு முதலாக வகர ஒற்றொடு கூடி அவ், இவ், உவ் என்று சொல்லப்படும் வகர ஈற்றுப் பெயர்களும், யாது யா யாவை என்னும் ஆவயின் மூன்றோடு அப் பதினைந்து பெயரும்-யாது? யா? யாவை? என்று சொல்லப் படுகின்ற அவ் வினாப் பொருளிடத்து மூன்று பெயர்களொடுங் கூடிய அப் பதினைந்து பெயர்களும், பால் அறி வந்த அஃறிணைப்பெயரே-ஒருமை பன்மைப்பால் அறிய வந்த அஃறிணைப் பெயராம், எ-று.
(13)
அஃறிணை ஒருசார்ப் பெயர்கள்
170.
பல்ல பலசில என்னும் பெயரும்
உள்ள இல்ல என்னும் பெயரும்
வினைப்பெயர்க் கிளவியும் பண்புகொள் பெயரும்
இனைத்தெனக் கிளக்கும் எண்ணுக்குறிப் பெயரும்
ஒப்பி னாகிய பெயர்நிலை உளப்பட
அப்பா லொன்பதும் அவற்றோ ரன்ன.
இதுவும், அஃறிணை ஒருசார்ப் பெயர்களைக் கூறுகின்றது.
(இ-ள்.)
|