நச்சினார்க்கினியர் உரை - சொல்லதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   622
Zoom In NormalZoom Out


 

‘பிறந்தவர்கள்  எல்லாம்  அவாப்பெரியர் ஆகி’ (சீவக. 2622) எனவும்,
‘கற்றனங்கள் யாமுமுடன்  கற்பனைகள் எல்லாம்’ (சீவக. 1795) எனவும்,
‘எங்கள்வினை யாலிறைவன் வீடியவஞ் ஞான்றே’ (சீவக. 1793) எனவுங்
‘கள்’  ஈறு  பலரை  உணர்த்தி நின்றனவால் எனின், இவற்றுள் பலரை
உணர்த்துதற்கு  ஓதிய  ஈறுகளே  பலரை  உணர்த்தி  நின்றன;  ‘கள்’
என்பது  இசை  நிறைத்து  நின்றது  எனப்படும். அவ்வீறுகள் ஒழியத்
தாமே  பலரை உணர்த்துவன உளவேற், ‘கடிசொல் இல்லைக் காலத்துப்
படினே’ (452) என்றதனாற் கொள்க. அஃது, இக்காலத்துப் ‘பெண்டுகள்’
என்றாற்போல வருவனபோலும். (15)
 

அஃறிணைப் பெயர்க்குப் புறனடை
 

172. அன்ன பிறவும் அஃறிணை மருங்கின்
பன்மையும் ஒருமையும் பாலறி வந்த
 

என்ன பெயரும் அத்திணை யவ்வே.
 

இஃது, அஃறிணைப் பெயர்க்குப் புறனடை கூறுகின்றது.
 

(இ-ள்.)  அன்ன பிறவும் அஃறிணை மருங்கின் - முற்கூறிய பெயர்
போல்வன பிறவுமாகிய அஃறிணைக்கண், பன்மையும் ஒருமையும் பால்
அறி  வந்த-பன்மையும்  ஒருமையுமாகிய  பால்  விளங்கவந்த, என்ன
பெயரும்   அத்திணையவ்வே-எல்லாப்  பெயரும்  அவ்வஃறிணைக்கு
உரிய பெயராம். எ-று.
 

(எ-டு.)  பிறிது, பிற; அனையது, அனையன; மற்றையது, மற்றையன;
பல்லவை,  சில்லவை;  உள்ளது, இல்லது; உள்ளன, இல்லன; அன்னது
அன்னன  என  வரும்.  நிலம்,  நீர்,  தீ,  வளி, ஆகாயம், உண்டல்,
தின்றல், கருமை, செம்