நச்சினார்க்கினியர் உரை - சொல்லதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   624
Zoom In NormalZoom Out


அல்லது திணை விளங்க நில்லா, எ-று, 

(எ-டு.) சாத்தன்  வந்தான், சாத்தன்  வந்தது;  முடவன்  வந்தான்,
முடவன் வந்தது என வரும். 

‘நினையுங்காலை’   என்றதனான், சாத்தன் ஒருவன், சாத்தன் ஒன்று
எனப்   பெயரொடு   வந்து   பால்  விளக்கலுங்  கொள்க.  இன்னும்
இதனானே,  முற்கூறிய  அஃறிணை  இயற்பெயர்களும் ஆ ஒன்று, ஆ
பல   எனப்  பெயரான்  பால்  அறியப்படுதலுங்  கொள்க.  இன்னும்
இதனானே,  முலை  எழுந்தது,  மோவாய் எழுந்தது என்றாற்போல்வன
தம் சினைவினையான் திணை தெரியாமையுங் கொள்க. 

விரவு வினையானுந் திணையறியப்படல்

175. நிகழூஉ நின்ற பால்வரை கிளவியின்
உயர்திணை ஒருமை தோன்றலும் உரித்தே
அன்ன மரபின் வினைவயி னான. 

இஃது, அவ்விரவுப்பெயர், விரவு வினையானும் திணை அறியப்படும்
என்கின்றது. 

(இ-ள்.)  நிகழூஉ நின்ற பால்வரை கிளவியின் - நிகழ்காலமே பற்றி
வரும்  செய்யும்  என்னும்  முற்றுச்சொல்லான்,  உயர்திணை ஒருமை
தோன்றலும்   உரித்தே  -  உயர்திணை  ஒருமைப்பால்  தோன்றலும்
உரித்து,  அன்ன  மரபின்  வினை வயினான - அவ்வொருமைப் பால்
தோன்றுதற்கு ஏற்ற வினையிடத்து, எ-று. 

(எ-டு.)  சாத்தன்  யாழ்  எழூஉக,  குழல் ஊதும், பாடும் எனவும்;
சாத்தி சாந்தரைக்கும், பூத்தொடுக்கும் எனவும் வரும். 

இனி, ‘ஒன்றென    முடித்தல்’   என்பதனான்,   வியங்கோளானும்
உயர்திணை ஒருமை தோன்றலுங் கொள்க. 

(எ-டு.) சாத்தன் யாழ் எழூஉக! சாத்தி சாந்து அரைக்க! என வரும்.

சாத்தன்     புல் தின்னும், சாத்தி கன்று ஈனும் என அஃறிணையும்
வருமால்   எனின்,   ‘சாத்தன்  புல்  தின்னும்’  என்பது,  ‘புல்லரிசிச்
சோற்றைத் தின்னும்’ என்று