நச்சினார்க்கினியர் உரை - சொல்லதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   626
Zoom In NormalZoom Out


‘காடன்,     காடி,  நாடன்,  நாடி,  தரையன்,  திரையன்,  மலையன்’
போல்வனவும், ‘முதியான்’ எனப் பிராயம்பற்றி வருவனவும், ‘சுமையன்’
எனத் தொழில்பற்றி வருவனவும், பிறவுமாம். (20) 

விரவுப்பெயரின் பாகுபாடு

177. அவற்றுள்,
நான்கே இயற்பெயர் நான்கே சினைப்பெயர்
நான்கென மொழிமனார் சினைமுதற் பெயரே
முறைப்பெயர்க் கிளவி இரண்டா கும்மே
ஏனைப் பெயரே தத்தம் மரபின. 

இது, தொகுத்தனவற்றை விரிக்கின்றது. 

(இ-ள்.)     அவற்றுள்  -  முற்கூறிய  விரவுப்பெயருள்,  நான்கே
இயற்பெயர் -இயற்பெயர் நான்கு வகைப்படும்; நான்கே சினைப்பெயர்-
சினைப்பெயர்  நான்கு  வகைப்படும்;  நான்கு  சினைமுதற்  பெயரே-
சினைமுதற்   பெயர்   நான்கு  வகைப்படும்;  முறைப்பெயர்க்  கிளவி
இரண்டு ஆகும்மே - முறைப் பெயராகிய சொல் இரண்டு வகைப்படும்;
ஏனைப்   பெயரே   தத்தம்   மரபின   -  ஒழிந்த  ஐந்து  பெயரும்
பொருண்மை சுட்டாது ஒரோவொன்றாய் நின்ற பெயரைச் சுட்டி நிற்கும்
இலக்கணத்தன;  என  மொழிமனார் - என்று கூறுவர் ஆசிரியர், எ-று.
(21) 

இயற்பெயர் நான்கன் பெயரும் முறையும்

178. அவைதாம்,
பெண்மை இயற்பெயர் ஆண்மை இயற்பெயர்
பன்மை இயற்பெயர் ஒருமையியற் பெயரென்று
அந்நான் கென்ப இயற்பெயர் நிலையே. 

இஃது, ‘இயற்பெயர்   நான்கு’   என்றவற்றின் பெயரும்  முறையுங்
கூறுகின்றது. 

(இ-ள்.)  அவைதாம்-அவ்வாறு பகுக்கப்பட்டனதாம் யாவை எனின்,
இயற்பெயர்   நிலையே   -  இயற்பெயரது  நிலைமையை,  பெண்மை
இயற்பெயர்   ஆண்மை  இயற்பெயர்  பன்மை  இயற்பெயர்  ஒருமை
இயற்பெயர்  என்று  அந்நான்கு  என்ப  -  பெண்மை இயற்பெயரும்
ஆண்மை இயற் பெயரும் பன்மை இய