திங்கள் பொன்னுடைத் தாலி என்மகன் ஒற்றி வருகுவை யாயின் தருகுவென் பாலென விலங்கமர்க் கண்ணள் விரல்விளி பயிற்றித் திதலை யல்குலெங் காதலி புதல்வற் பொய்க்கும் பூங்கொடி நிலையே.’’
(அகம். 54)
இது பாகற்குரைத்தது. இது முல்லைக்கட் காரும் மாலையும் வந்தது.
‘‘மன்றுபா டவிந்து மனைமடிந் தன்றே கொன்றோ ரன்ன கொடுமையோ டின்றே யாமங் கொளவரிற் கனைஇக் காமங் கடலினு முரைஇக் கரைபொழி யும்மே யெவன்கொல் வாழி தோழி மயங்கி இன்ன மாகவும் நன்னர் நெஞ்சம் என்னொடும் நின்னொடுஞ் சூழாது கைம்மிக் கிறும்புபட் டிருளிய இட்ட ருஞ்சிலம்பிற் குறுஞ்சுனைக் குவளை வண்டுபடச் சூடிக் கானக நாடன் வரூஉம் யானைக் கயிற்றுபுறத தன்ன கன்மிசைச் சிறுநெறி மாரிவானந் தலைஇ நீர்வார்பு இட்டருங் கண்ண படுகுழி யியவின் இருளிடை மிதிப்புழி நோக்கியவர் தளரடி தாங்கிய சென்ற தின்றே.’’
(அகம்.128)
இரவுக்குறிக்கட் சிறைப்புறமாகத்
தோழிக்கு உரைப்பாளாக உரைத்தது. இது குறிஞ்சிக்குக் கூதிரும் யாமமும் வந்தது.
நிலனும்
பொழுதும் முதலென்றமையிற் கார் முதலாதல் வேண்டும்; வேண்டவே, அதற்கிடையின்றிக் கூறிய மாலையும் அதன் சினையாமாதலிற், கார்காலத்து மாலையென்பது பெற்றாம். இது கூதிர்யாமம் என்பதற்கும் ஒக்கும். (6)
குறிஞ்சிக்கு முன்பனியு முரித்தெனல்
|