நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   2291
Zoom In NormalZoom Out


யுலகத்துப் பாலை வந்தது.

‘‘தொடங்கற்கட் டோன்றிய முதியவன் முதலாக
வடங்காதார் மிடல்சாய வமரர்வந் திரத்தலின்
மடங்கல்போற் சினைஇ மாயஞ்செ யவுணரைக்
கடந்தடு முன்பொடு முக்கண்ணான் மூவெயிலு
முடன்றக்கான் முகம்போல வொண்கதிர் தெறுதலிற்
சீறருங் கணிச்சியோன் சினவலி னவ்வெயி
லேறுபெற் றுதிர்வனபோல் வரைபிளந் தியங்குந
ராறுகெட விலங்கிய வழலவி ராரிடை
மறப்பருங் காத லிவளீண் டொழிய
விறப்பத் துணிந்தனிர் கேண்மின்மற் றைஇய’’    (கலி.2)

இது மைவரை யுலகத்துப் பாலை வந்தது.

‘‘மறந்தவ     ணமையா ராயினும்’’ (37) என்னும் அகப்பாட்டுள்
தீம்புனலுலகத்துப்  பாலை  வந்தது. ‘‘அருளி லாளர்  பொருள் வயி
னகல’’
  (அகம்.305)  என்னும்  அகப்பாட்டினுட்  பெருமணலுகத்துப்
பாலை வந்தது.

இன்னும்     பிறவுஞ் சான்றோர் செய்யுட்கண்ணே உரிப் பொருள்
மயங்கியுங்   காலங்கள்   மயங்கியும்   வருவனவெல்லாம்  இதனான்
அமைத்துக் கொள்க.

உரிப்பொருளாவன
 

14. புணர்தல் பிரிதல் இருத்தல் இரங்கல்
ஊடல் இவற்றின் நிமித்தம் என்றிவை
தேருங் காலைத் திணைக்குரிப் பொருளே
 

இதுவும்  மேனிறுத்த முறையானன்றியும் அதிகாரப்பட்டமை கண்டு
உரிப்பொருள்    கூறுகின்றது,     உரிப்பொருள்    உணர்ந்தல்லது
உரிப்பொருளல்லன உணரலாகாமையின்.

(இ-ள்) புணர்தலும் புணர்தனிமித்தமும்;பிரிதலும் பிரிதனிமித்தமும்;
இருத்தலும்    இருத்தனிமித்தமும்   இரங்கலும்   இரங்கனிமித்தமும்,
ஊடலும்     ஊடனிமித்தமும்    என்ற    பத்தும்    ஆராயுங்கால்
ஐந்திணைக்கும் உரிப்பொருளாம் எ-று.

‘தேருங்காலை’ என்றதனாற் குறிஞ்சிக்குப் புணர்ச்சியும்,பாலைக்குப்
பிரிவும்,  முல்லைக்கு இருத்தலும், நெய்தற்கு இரங்கலும், மருதத்திற்கு
ஊடலும்   அவ்வந்நிமித்தங்களும்   உரியவென்று  ஆராய்ந்துணர்க.
இக்கருத்தே     பற்றி   ‘மாயோன்    மேய’    (5)    என்பதனுள்
விரித்துரைத்தவாறுணர்க.

அகப்பொருளாவது புணர்ச்சியாகலானும் அஃது இருவர்க்கும் ஒப்ப
நிகழ்தலானும்    புணர்ச்சியை    முற்கூறிப்,   புணர்ந்துழி   யல்லது
பிரிவின்மையானும் அது தலைவன் கண்ணதாகிய சிறப்பானுந் தலைவி
பிரிவிற்குப் புலனெறி வழக்கின்மையானும் பிரிவினை