நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   2297
Zoom In NormalZoom Out


வேளாளர்க்கு     இன்மையிற்   ‘கொண்டு தலைக்கழிதல்’  அவர்க்கு
உரியதாயிற்று.   ஒழிந்த   மூன்று   வருணத்தோருந்  தமக்கு  உரிய
பிரிவின்கட் செந்தீ யோம்புவாரை நாட்டிப் பிரிப; ஆகலான், அவர்க்கு
ஏனைப்  பிரிவுகள்  அமைந்தன.  இதனைக்  ‘‘கொடுப்போ ரின்றியுங்
கரண  முண்டே’  (143) எனக் கற்பியலிற் கரணம் வேறாகக் கூறுமாறு
ஆண்டுணர்க.     ‘‘வேர்முழுதுலறி  நின்ற’’     (145)   என்னும்
மணிமிடைபவளத்துட்  ‘‘கூழுடைத்  தந்தையிடனுடை  வரைப்பி,’’
னூழடி யொதுங்கினு  முயக்கும் ‘‘எனவுங்’’ ‘‘கிளியும் பந்தும்’’ (49)
என்னும் களிற்றியானை  நிரையுள்,  ‘‘அல்குபத  மிகுந்த  கடியுடை
வியனகர்’’
  எனவும்,  நெல்லுடைமை  கூறிய  அதனானே வேளாண்
வருணமென்பது பெற்றாம்.

பாலைக்கட் குறிஞ்சி மயங்குதல்
 

16. கலந்த பொழுதும் காட்சியும் அன்ன.
 

இதுவும் பாலைக்கட் குறிஞ்சி மயங்கு மென்கின்றது.

(இ-ள்)     கலந்த  பொழுதும் காட்சியும் - இயற்கைப் புணர்ச்சி
நிகழ்ந்த காலமும் அதன் முன்னர்த்தாகிய வழிநிலைக் காட்சி நிகழ்ந்த
காலமும்;  அன்ன  -  முன்னர்ச் சூத்திரத்துட் கொண்டுதலைக்கழிந்த
காலத்தை உடைய எ-று.

என்றது,  முன்னர்க் குறிஞ்சி பாலைக்குரிய இருவகை வேனிற்கண்
நிகழ்ந்தாற் போல இவையும் இருவகை வேனிற்கண் நிகழுமென்றவாறு.
மழைகூர்   ாலத்துப்   புறம்   போந்து  விளையாடு  தலின்மையின்
எதிர்ப்பட்டுப்   புணர்தல்   அரிதாகலானும்,   அதுதான்   இன்பஞ்
செய்யாமையானும்  இருவகை  வேனிற் காலத்தும் இயற்கைப்புணர்ச்சி
நிகழுமென்று இச்சூத்திரம்.

முன்னர்க்     கூதிரும்  யாமமும்  முன்பனியுஞ்  சிறந்ததென்றது,
இயற்கைப்புணர்ச்சிப்    பின்னர்க்    களவொழுக்கம்    நிகழ்தற்குக்
காலமென்றுணர்க.

அது,

‘‘பூவொத் தலமருந் தகைய வேவொத்
தெல்லாரு மறிய நோய்செய் தனவே
தேமொழித் திரண்ட மென்றோண் மாமலைப்
பரீஇ வித்திய வேனற்
குரீஇ யோப்புவாள் பெருமழைக் கண்ணே’’    (குறுந்.72)

என வரும்.

இக்குறுந்தொகையுட்  குரீஇ யோப்புவாள் கண்ணெண வழி நிலைக்
காட்சியைப்  பாங்கற்குக்  கூறினமையின் அத்தினைக்கதிர் முற்றுதற்கு
உரிய இளவேனிலும் பகற்பொழுதுங்  காட்சிக்கண் வந்தன. ‘‘கொங்கு
தேர் வாழ்க்கை’’
என்பதும்  இளவேனி  லாயிற்று;  தும்பி  கொங்கு
தேருங்காலம்       அதுவாதலின்.      கலத்தலுங்      காட்சியும்
உடனிகழுமென்றுணர்க.    கலத்தலின்றிக்    காட்சி    நிகழ்ந்ததேல்
உள்ளப்புணர்ச்சியேயாய் மெய்யுறு புணர்ச்சியின்றி வரைந்த கொள்ளு