நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   2304
Zoom In NormalZoom Out


மயிற்க ணன்ன மாண்முடிப் பாவை
நுண்வலைப் பரதவர் மடமகள்
கண்வலைப் படூஉங் கான லானே.’’         (குறுந்.184)

இது கழறிய பாங்கற்குக் கூறியது.

‘‘கடுந்தே ரேறியுங் காலிற் சென்றும்....
என்நினை யுங்கொல் பரதவர் மகளே.’’       (நற்.349)

என வரும். இது நற்றிணை.

‘‘இவளே, கான  நண்ணிய’’  (45)  என்னும்  நற்றிணைப்  (45)
பாட்டினுட்   ‘‘கடுந்தேர்ச்   செல்வன்  காதன்  மகனே’’  என்று
அவனருமை  செய்தயர்த்தலின்   அவனை   இகழ்ச்சிக்   குறிப்பான்
அறிவித்துக்   கூறினாள்.  ஏனைப்   பெண்பெயர்க்கண்  வருவனவும்
வந்துழிக் காண்க.

‘‘ஏனோர் பாங்கினும்’’ எனப் பொதுப்படக்கூறிய அதனான் மருத
நிலத்து  மக்களுட்  டலைமக்கள் உளராகப் புலனெறி வழக்கஞ் செய்த
செய்யுள்கள் வந்தன உளவேற் கண்டுகொள்க.                (22)

அடியோரும் வினைவலரும் தலைமக்களாதற் குரியரெனல்
 

23. அடியோர் பாங்கினும் வினைவலர் பாங்கினுங்
கடிவரை யிலபுறத் தென்மனார் புலவர்.
 

இது     மேல்  நால்வகை  நிலத்து  மக்களுந்  தலைமக்களாகப்
பெறுவரென்றார்;  அவரேயன்றி இவருந் தலைமக்களாகுப, கைக்கிளை
பெருந்திணைக்க ணென்கின்றது.

(இ-ள்)     அடியோர்    பாங்கினும்.    பிறர்க்குக்   குற்றேவல்
செய்வோரிடத்தும்;  வினை வலர் பாங்கினும். பிறர் ஏவிய தொழிலைச்
செய்தல்  வல்லோரிடத்தும்;  கடி வரையில் புறத்து என்மனார் புலவர்.
தலைமிக்க புறத்து நின்ற கைக்கிளை பெருந்திணைகளுள் எ-று.

கூன்பாட்டினுள்,

‘‘நம்மு ணகுதற் றொடீஇயர் நம்முணா
முசாவுவங் கோனடி தொட்டேன்.’’

எனவும்,

‘‘பேயும் பேயுந் துள்ள லுறுமெனக்
கோயிலுட் கண்டோர் நகாமை வேண்டுவல்.’’   (கலி.94)

எனவும்     பெருந்திணைக்கண்   அடியோர்   தலைவராக  வந்தது.
என்னை?   கோன்   அடிதொட்டேன்   என்றமையானும்   கோயில்
என்றமையானும் இவர்கள் குற்றேவன்மாக்கள் என்பது ஆயிற்று.

‘ஏஎயிஃதொத்தன்’ என்னும் குறிஞ்சிக்கலியுள்

‘‘போற்றாய் களைநின் முதுக்குறைமை போற்றிக்கேள்
வேட்டார்க் கினிதாயி னல்லது நீர்க்கினிதென்
றுண்பவோ நீருண் பவர்.’’                  (கலி.62)

தீயகாமம் இழிந்தோர்க்குரிமையின், இதுவும் அடியோர் தலைவராக
வந்த    கைக்கிளை.  அடியோரெனவே   இருபாற்றலை   மக்களும்
அடங்கிற்று.   ‘கடிவரையில’  என்றதனான்  அவருட்  பரத்தையரும்
உளரென்று கொள்க.

‘‘இகல்வேந்தன்’’ என்னும் முல்லைக்கலியுள்,

‘‘மேயு நிரைமுன்னர்க் கோலூன்றி நின்றாயோ
ராயனை யல்லை பிறவோ வமரருண்
ஞாயிற்றுப் புத்தேண் மகன்.’’               (கலி.108)

என்பதனாற் றலைவன் வினைவல பாங்கனாயினவாறு