இத் துணையும் அகத்திற்குப் பொதுவாகிய முதல் கரு வுரிப் பொருளே கூறி இனி இருவகைக் கைகோளுக்கும்
பொதுவாகிய பாலைத்திணை கூறிய எழுந்தது.
(இ-ள்.)
பிரிவே - பாலையென்னும் பிரிதற் பொருண்மை; ஓதல் பகையே தூத இவை - ஓதற்குப் பிரிதலும், பகைமேல் பிரிதலும், பகைமேற் பிரிதலும் பகைவரைச் சந்துசெய்தன் முதலிய தூது பற்றிப் பிரிதலுமென மூன்று வகைப்படும் எ-று.
ஒரோவொன்றே அறமுந்
துறக்கமும் பொருளும் பயத்தற் சிறப்புநோக்கி இவற்றை இவையென விதந்தோதினார்.
‘இவை’ யென்றதனை எடுத்தலோசையாற் கூறவே அறங்கருதாது அரசரேவலான் தூதிற்பிரிதலும், போர்த்தொழில்
புரியாது திறைகோடற்கு இடை நிலத்துப் பிரிதலுஞ் சிறப்பின்மை பெறுதும். அறங் கருதாது பொருள் ஈட்டுதற்குப் பிரிதலும் பொருள்வயிற் பிரிவிற்கு உண்மையின் இவற்றோடு ஓதாது பிற்கூறினார். அந்தணர்க்குரிய ஓதலுந் தூதம் உடன் கூறிற்றிலர், பகைபிறந்தவழித் தூது நிகழ்தலின். (25)
பிரிவுள் ஓதலுந் தூதும் இவர்க்குரியவெனல்
|