நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   2309
Zoom In NormalZoom Out


ஒழிந்த  பகைவயிற்  பிரிவு  அரசர்க்கே  உரித்தென  மேலே கூறுப.
உயர்ந்தோரெனக் கூறலின் வேளாளரை ஒழித்தாரென்றுணர்க.

உ-ம்:

‘‘அரம்போ ழவ்வளை தோணிலை ஞெகிழ
நிரம்பா வாழ்க்கை நேர்தல் வேண்டி
ஈர்ங்கா ழன்ன அரும்புமுதி ரீங்கை
ஆலி யன்ன வால்வீ தாஅய்
வைவா லோதி மையணல் ஏய்ப்பத்
தாதுறு குவளைப் போதுபிணி யவிழப்
படாஅப் பைங்கட் பாவடிக் கயவாய்க்
கடாஅம் மாறிய யானை போலப்
பெய்துவறி தாகிய பிறங்குசெலற் கொண்மூ
மைதோய் விசும்பின் மாதிரத் துழிதரப்
பனியடூஉ நின்ற பானாட் கங்குல்
தமியோர் மதுகை தூக்காய் தண்ணென
முனிய அலைத்தி முரணில் காலைக்
கைதொழு மரபிற் கடவுள் சான்ற
செய்வினை மருங்கிற் சென்றோர் வல்வரின்
விரியுளைப் பொலிந்த பரியுடை நன்மான்
வெருவரு தானையொடு வேண்டுபுலத் திறுத்த
பெருவளக் கரிகால் முன்னிலை செல்லார்
சூடா வாகைப் பறந்தலை ஆடுபெற
ஒன்பது குடையும் நன்பக லொழித்த
பீடில் மன்னர் போல
ஓடுவை மன்னால் வாடைநீ யெமக்கே.’’      (அகம்.125)

இதனுட்     பலருங்    கைதொழும்    மரபினையுடைய    கட
வுட்டன்மையமைந்த     செய்வினையெனவே     ஓதற்பிரிதலென்பது
பெற்றாம். ‘‘சிறந்தது பயிற்ற லிறந்ததன் பயனே’’ (192) என்பதனாற்
கிழவனும்    கிழத்தியும்     இல்லறத்திற்   சிறந்தது   பயிற்றாக்கால்
இறந்ததனாற்  பயனின்றாதலின்,  இல்லறம் நிரம்பாதென்றற்கு ‘நிரம்பா
வாழ்க்கை’  யென்றார்.  இல்லறம்  நிகழ்கின்ற  காலத்தே  மேல்வருந்
துறவறம்  நிகழ்த்துதற்காக  அவற்றைக்  கூறும்  நூல்களையும்  கற்று
அவற்றின்   பின்னர்த்   தத்துவங்களையுமுணர்ந்து    மெய்யுணர்தல்
அந்தணர்  முதலய  மூவர்க்கும்  வேண்டுதலின் ஓதற்பிரிவு அந்தணர்
முதலியோர்க்கே சிறந்ததென்றார்.

‘‘பொய்யற்ற கேள்வியாற் புரையோரைப் படர்ந்துநீ
மையற்ற படிவத்தான் மறுத்தர லொல்வதோ.’’   (கலி.15)

என்பதும்     அது;   மையற்ற   படிவம்   அந்தணர்  முதலியோர்
கண்ணதாகலின்.  ‘‘விருந்தின்மன்னர்’’ (54) என்னும்  அகப்பாட்டில்
வேந்தன்  பகைமையைத்  தான்  தணிவித்தமை  கூறலின் அந்தணன்
தூதிற்   பிரிந்தமை   பெற்றாம்.   ‘‘வயலைக்   கொடியின் வாடிய
மருங்குல்’’
  (புறம்.305)  என்னும்   புறப்பாட்டில்  அந்தணன்  தூது
சென்றவாறுணர்க. அரசன்   தூதுசேறல்   பாரதத்து வாசுதேவன் தூது
சென்றவாற்றா னணர்க.

அது.