இஃது எய்தாத தெய்துவித்தது.
(இ-ள்.) மேலோர்
முறைமை - மேல் அதிகாரப்பட்டு நின்ற வாணிகர்க்கு ஓதிய அறந்தலைப் பிரியாப் பொருள் செயல்வகை; நால்வர்க்கும் உரித்து - அந்தணர்க்கும் அரசர்க்கும் இருவகை வேளாளர்க்கும் உரித்து எ-று.
இதற்கு
வணிகர்க்கு வேதநூலுள் இழைத்த பொருண் முடிவானே இந்நால்வரும் பொருண்முடிப்பரெனிற் பிரிவொன்றாகி மயங்கக் கூறலென்னும்
குற்றம் தங்குமாகலின் அது கருத்தன்று; இந்நால்வருள், அந்தணர் ஓதலுங் தூதும் பற்றிப் பொருண் முடித்தலும், அரசர் பகைவயிற் பிரிவு பற்றிப் பொருண்முடித்தலும், உயர்ந்த வேளாளர் பகைவயிற் பிரிவு பற்றிப் பொருண்முடித்தலும் உழுதண்பார் வாணிகத்தாற் பொருண்முடித்தலுங் கருத்து.
இவற்றுள்
வேள்விக்குப் பிரிந்து சடங்கிற்கு உறுப்பாகியும் அதற்குக் குரவனாகியும் நிற்றல் உரிமையின் ஆண்டு வேள்வி செய்தான் கொடுத்த பொருள்கோடல் வேண்டுதலானும் அறங்கருதித் தூதிற் பிரியினும் அவர் செய்த பூசனை கோடல்வேண்டுமாகலானும் அவை அந்தணர்க்குப் பொருள் வருவாயாயின. வேள்விக்குப் பிரிதல் ஓதற் பிரிவின் பகுதியாயிற்று.
உ-ம்:
‘‘நெஞ்சு நடுக்குறக் கேட்டுங் கடுத்துந்தா மஞ்சிய தாங்கே யணங்காகு மென்னுஞ்சொ லின்றீங் கிளவியாய் வாய்மன்ற நின்கேள் புதுவது பன்னாளும் பாராட்ட யானு மிதுவொன்றுடைத்தென வெண்ணி யதுதேற மாசில்வண் சேக்கை மணந்த புணர்ச்சியுட் பாயல்கொண் டென்றோட் கனவுவா ராய்கோற் றொடிநிரை முன்கையாள் கையாறு கொள்ளாள் கடிமனை காத்தோம்ப வல்லுவள் கொல்லோ விடுமருப் பியானை யிலங்குதேர்க் கோடு நெடுமலை வெஞ்சுரம் போகி நடுநின்றெம் செய்பொருண் முற்று மளவென்றா ராயிழாய் தாமிடை கொண்டததுவாயிற் றம்மின்றி யாமுயிர் வாழு மதுகை யிலமாயிற் றொய்யி றுறந்தா ரவரெனத் தம்வயி னொய்யார் நுவலும்
|