இஃது
இத்துணையும் பாலைக்கு உரிய இலக்கணங் கூறி, மகடூஉ அதிகாரப்படுதலிற் பெருந்திணைக்கு உரியதோர்
இலக்கணங் கூறுகின்றது.
(இ-ள்.) எத்திணை
மருங்கினும் -
கைக்கிளைமுதற் பெருந்திணையிறுவாய் ஏழன்கண்ணும்; மகடூஉ மடல்மேல் நெறிமை -தலைவி மடலேறினாளாகக் கூறும் புலனெறிவழக்கம்; பொற்புடைமை இன்மையான - பொலிவுடைமையின்று; ஆதலான் அது கூறப்படாது எ-று.
‘‘கடலன்ன காம முழந்து மடலேறாப் பெண்ணிற் பெருந்தக்க தில்’’
(குறள்.1137)
எனவரும்.
‘‘கடலன்ன காமத்த ராயினும் பெண்டிர் மடலூரார் மைந்தர்மே லென்ப - மடலூர்தல் காட்டுகேன் வம்மின் கலிவஞ்சி யார்கோமான் வேட்டமா மேல்கொண்ட போழ்து’’
என்றாராலோவெனின், இது மடலேற்றன்று;
ஏறுவலெனக் கூறிய துணையாம்.
உடன்போக்கின்கண் நற்றாயிரங்கற் பகுதிகளாவன
|