முடங்குதாள் உதைத்த பொலங்கெழு பூழி பெரும்புலர் விடியல் விரிந்துவெயில் எறிப்பக் கருந்தார் மிடற்ற செம்பூழ்ச் சேவல் சிறுபுன் பெடையொடு குடையும் ஆங்கண் அஞ்சுவரத் தகுந கானம் நீந்திக் கன்றுகா ணாதுபுன் கண்ண செவிசாய்த்து மன்றுநிறை பைதல் கூரப் பலவுடன் கறவை தந்த கடுங்கான் மறவர் கல்லென் சீறூர் எல்லியின் அசைஇ முதுவாய்ப் பெண்டின் செதுகால் குரம்பை மடமயி லன்னஎன் நடைமெலிபேதை தோள் துணை யாகத் துயிற்றத் துஞ்சாள் வேட்டக் கள்வர் விசியுறு கடுங்கண் சேக்கோள் அறையுந் தண்ணுமை கேட்குநள் கொல்லெனக் கலுழுமென் னெஞ்சே’’
(அகம்.63)
இவை அச்சங் கூறின.
தந்தை
தன்னையர் சென்றாரென்று சான்றோர் செய்யுட் செய்திலர், அது புலனெறிவழக்கம் அன்மையின்.
இனிச் சார்தலும்
இருவகைத்து, தலைவி சென்று சாரும் இடனும், மீண்டு வந்து சாரும் இடனுமென.
உ-ம்:
‘‘எம்வெங் காமம் இயைவ தாயின் மெய்ம்மலி பெரும்பூட் செம்மற் கோசர் கொம்மையம் பசுங்காய்க் குடுமி விளைந்த பாக லார்கைப் பறைக்கட் பீலித் தோகைக் காவின் துளுநாட் டன்ன வறுங்கை வம்பலர்த் தாங்கும் பண்பிற் செறிந்த சேரிச் செம்மல் மூதூர் அறிந்த மாக்கட் டாகுக தில்ல தோழி மாரும் யானும் புலம்பச் சூழி யானைச் சுடர்ப்பூண் நன்னன் பாழி யன்ன கடியுடை வியன்நகர்ச் செறிந்த காப்பிகந் தவனொடு போகி அத்தஇருப்பை ஆர்கழல் புதுப்பூத் துய்த்த வாய துகள்நிலம் பரக்கக் கொன்றை யஞ்சினைக் குழற்பழங் கொழுதி வன்கை யெண்கின் வயநிரை பரக்கும் இன்றுணைப் பிரிந்த கொள்கையோ டொராங்குக் குன்ற வேயில் திரண்டஎன் மென்றோள் அஞ்ஞை சென்ற ஆறே’’
(அகம்.15)
‘‘அருஞ்சுரம் இறந்தவென் பெருந்தோட்குறுமகள் திருந்துவேல் விடலையொடு வருமெனத் தாயே புனைமாண் இஞ்சி பூவல் ஊட்டி மனைமணல் அடுத்து மாலை நாற்றி உவந்தினி தயரு மென்ப யானு மான்பிணை நோக்கின் மடநல் லாளை யீன்ற நட்பிற் கருளான் ஆயினும் இன்னகை முறுவல் ஏழையைப் பன்னாட் கூந்தல் வாரிநுசுப்பிவர்ந் தோம்பிய நலம்புனை யுதவியோ உடையேன் மன்னே அஃதறி கிற்பினோ நன்றுமற் றில்ல அறுவை தோயும் ஒரு பெருங் குடுமிச் சிறுபை நாற்றிய பஃறலைக் கருங்கோல் ஆகுவ தறியும் முதுவாய் வேல கூறுக மாதோநின் கழங்கின் றிட்பம் மாறாது வருபனி கலுழுங் கங்குலின் ஆனாது துயருமென் கண்ணினிது படீஇயர் எம்மனை முந்துறத் தருமோ தன்மனை உய்க்குமோ யாதவன் குறிப்பே’’
(அகம்.195)
இவ் வகப்பாட்டு இரண்டும் தெய்வத்தொடு படுத்துப் புலம்பியது.
‘‘இல்லெழும் வயலை யிலையு மூழ்த்தன சொல்வன் மாக்களிற் செல்லு மஃகின மயிலடி யிலைய மாக்குரல் நொச்சிப் பயிலிணர் நறும்பொழிற் பாவையுந் தமியள் ஏதி லாளன் பொய்ப்பப் பொய்மருண்டு பேதை போயினள் பிறங்குமலை யிறந்தென மான்ற மாலை மனையோர் புலம்ப ஈன்ற தாயு மிடும்பைய ளெனநினைந்து அங்கண் வானத் தகடூர்ந்து திரிதருந் திங்களங் கடவுள் தெளித்துநீ பெயர்த்தரிற் கடிமலர்க் கொன்றைக் காவலன் சூடிய குடுமியஞ் செல்வங் குன்றினுங் குன்றாய் தண்பொழில் கவித்த தமனிய வெண்குடை ஒண்
|