நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   2323
Zoom In NormalZoom Out


தாய் சேறலும் புலனெறி வழக்கிற்குச் சிறந்தவென்றுணர்க.

உ-ம்:

‘‘வெம்மலை யருஞ்சுர நம்மிவ ணொழிய
விருநில முயிர்க்கு மின்னாக் கானம்
நெருநற் போகிய பெருமடத் தகுவி
யைதக லல்குற் றழையணிக் கூட்டுங்
கூழை நொச்சிக் கீழ தென்மகள்
செம்புடைச் சிறுவிரல் வரித்த
வண்டலுங் காணிரோ கண்ணுடை யீரே’’     (அகம்.275)

வண்டலைக்     காணார்  தேஎத்து நின்று காணில் ஆற்றீரெனக்
கூறினமையின்   ஆயத்திற்கன்றி   இற்புறஞ்  சென்று  சேரியோர்க்கு
உரைத்ததாயிற்று.

‘‘நிலந்தொட்டுப் புகாஅர் வான மேறார்
பிறங்கிரு முந்நீர்க் காலிற் செல்லார்
நாட்டி னாட்டி னூரி னூரிற்
குடிமுறை குடிமுறை தேரிற்
கெடுநரு முளரோநங் காத லோரே’’         (குறுந்.130)

இது  செவிலி  தேடத்  துணிந்தது. இக் குறுந்தொகையுள் நம்மாற்
காதலிக்கப்பட்டாரென்றது   அவ்  விருவரையும்.  தாயருமுளரென்றத
னாற்றந்தையும்   அன்னையரும்  வந்தால் இன்னது செய்வலென்றலும்
உளவென்று கொள்க.

‘‘நுமர்வரி னோர்ப்பி னல்ல தமர்வரின்
முந்நீர் மண்டில முழுது மாற்றாது’’

என்றாற்      போல்வன.   அடி   புறத்திடாதாள்   புறம்போதலும்
பிரிவென்றற்குச் சேரியுங்  கூறினார்.  அஃது  ஏமம்  இல்  இருக்கை
யன்றாதலின்.                                           (37)

மனைஅயற் பிரதலும் பிரிவுள் அடங்குமெனல்
 

38. அயலோர் ஆயினும் அகற்சி மேற்றே.
 

இதுவும் பாலைக்கு ஒரு வேறுபாடு கூறுகின்றது.

(இ-ள்.)  அயலோர்  ஆயினும்.  முற்கூறிய  சேரியினுஞ் சுரத்தினு
மன்றித்  தம்  மனைக்கு  அயலே  பிரிந்தாராயினும்;   அகற்சிமேற்று.
அதுவும் பிரிவின்கண்ணதாம் எ-று.

எனவே     நற்றாய்  தலைவியைத் தேர்ந்து இல்லிற் கூறுவனவுஞ்
சேரியிற்  கூறுவனவும்  பிரிந்தாரைப்  பின்  சென்றதேயாயிற்று.  இக்
கருத்தான்    ‘ஏமப்பேரூர்’   என்றார்.   இதனானே   மனையயற்கட்
பரத்தையிற் பிரிவும் பாலையென்று உய்த்துணர்க.              (38)

உடன்போக்கின்கண் தோழி கூற்றுக்கள் நிகழுமாறு
 

39. தலைவரும் விழும நிலையெடுத் துரைப்பினும்
போக்கற் கண்ணும் விடுத்தற் கண்ணும்
நீக்கலின் வந்த தம்முறு விழுமமும்
வாய்மையும் பொய்மையுங் கண்டோர்ச் சுட்டித்
தாய்நிலை நோக்கித் தலைப்பெயர்த்துக் கொளினும்
நோய்மிகப் பெருகித்தன் னெஞ்சுகலுழ் தோளை
யழிந்தது களைஇய வொழிந்தது கூறி
வன்புறை நெருங்கி வந்ததன் றிறத்தோடு
என்றிவை யெல்லா மியல்புற நாடின்
ஒன்றித் தோன்றுந் தோழி மேன.
 

இது தாயர்க்கு   உரியன   கூறி,   தோழிக்குக் கூற்று  நிகழுமாறு
கூறுகின்றது.

(இ-ள்.) தலைவரும் விழுமநிலை எடுத்து உரைப்பினும் - தலைவன்
கொண்டுதலைக்கழி