யாவிடிற் றலைவிகண்
தோன்றுந் துன்பநிலையைத் தலைவற்குந் தலைவிக்கும் விளங்கக் கூறினும்; பேர்க்கற்கண்ணும் - அது கேட்டு இருவரும் போகற்கொருப்பட்டுழித் தலைவியைப் போகவிடும் இடத்தும்; விடுத்தற்கண்ணும் - தலைவியை அவனொடு கூட்டி விடுக்குங்காற் றலைவற்குப் பாதுகாவலாகக் கூறும் இடத்தும்; நீக்கலின் வந்த தம் உறு விழுமமும் - தாயரை நீக்குதலான் தமக்குற்ற வருத்தத்திடத்தும்; வாய்மையும் பொய்மையும் கண்டோர்ச்
சுட்டித் தாய்நிலை நோக்கித் தலைப்பெயர்த்துக் கொளினும் - மெய்யும் பொய்யும் உணர்ந்த அறிவரது தரும நூற்றணிபும் இதுவெனக் கூறிப் பின் சென்று அவரை மீட்டற்கு நினைந்த தாயது நிலைமை அறிந்து அவரை மீளாதபடி அவளை மீட்டுக்கொளினும், நோய் மிகப்
பெருகித் தன் நெஞ்சு கலுழ்ந்தோளை அழிந்தது களைஇய ஒழிந்தது
கூறி வன்புறை நெருங்கி வந்ததன் திறத்தோடு - தலைவிபோக்கு நினைந்து நெஞ்சு மிகப் புண்ணுற்றுத் தடுமாறுந் தாயை அவ்
வருத்தந் தீர்த்தல்வேண்டி உழுவலன்பு காரணத்தாற் பிரிந்தாளென்பது உணரக்கூறி அவளை நெருங்கி வந்து ஆற்றுவித்தல் கூற்றோடே;என்றிவை யெல்லாம் இயல்புற நாடின் ஒன்றித் தோன்றும் தோழி மேன - என்று இச் சொல்லப் பட்டன எல்லாவற்றுக்கண்ணும் இலக்கண வகையான் ஆராயுங் காலத்துத் தான் அவள் என்னும் வேற்றுமையின்றி ஒன்றுபடத் தோன்றும் தோழிமேன கிளவி எ-று.
உ-ம்:
‘‘வெல்போர்க் குரிசில்நீ வியன்சுரன் னிறப்பிற் பல்கா ழல்கு லவ்வரி வாடக் குழலினு மினைகுவள் பெரிதே விழவொலி கூந்தனின் மாஅ யோளே’’
(ஐங்குறு.306)
இவ் வைங்குறுநூறு. குழலினும்
இரங்குவளென்று பிரிந்தவள் இரங்குதற் பொருள்படத் தோழி தலைவரும் விழுமம் தலைவற்குக் கூறினாள்.
‘‘உன்னங் கொள்கையோ டுளங்கரந் துறையும் அன்னை சொல்லும் உய்கம் என்னதூஉம் ஈரஞ் சேரா இயல்பின் பொய்ம்மொழிச் சேரியம் பெண்டிர் கௌவையும் ஒழிகம் நாடுகண்அகற்றிய உதியஞ் சேரற் பாடிச் சென்ற பரிசிலர் போல உவவினி வாழி தோழி யவரே பொம்மல் ஓதி நம்மொ டொராங்குச் செலவயர்ந் தனரால் இன்றே மலைதொறும் மால்கழை பிசைந்த கால்வாய் கூரெரி மீன்கொள் பரதவர் கொடுந்திமி னளிசுடர் வான்தோய் புணரி மிசைக்கண் டாங்கு மேவரத் தோன்றும் யாஉயர் நனந்தலை உயவல் யானை வெரிநுச்சென் றன்ன கல்லூர் பிழிதரும் புல்சாய் சிறுநெறிக் காடுமீக் கூறுங் கோடேந் தொருத்தல் ஆறுகடி கொள்ளு மருஞ்சுரம் பணைத்தோள் நாறைங் கூந்தற் கொம்மை வரி
|