நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   2330
Zoom In NormalZoom Out


தோன்றல் சான்ற மாற்றோர் மேன்மையும்
பாசறைப் புலம்பலும் முடிந்த காலத்துப்
பாகனொடு விரும்பிய வினைத்திற வகையினும்
காவற் பாங்கி னாங்கோர் பக்கமும்
பரத்தையி னகற்சியிற் பரிந்தோட் குறுகி
இரத்தலுந் தெளித்தலு மெனவிரு வகையோடு
உரைத்திற நாட்டம் கிழவோன் மேன.
 

இஃது உடன்போக்கினுள் நற்றாயுந்தோழியுங் கண்டோருங் கூறுவன
கூறித் தலைவன் ஆண்டும் பிறாண்டுங் கூறுங் கூற்றும் கூறுகின்றது.

‘தமரினும்  பருவத்துஞ்  சுரத்து’  மென்னும்  மூன்றற்கும்  ஒன்றா
வென்பதனையும்   ஒன்றிய   வென்பதனையுங்   கூட்டி   ஏழனுருபு
விரித்துப் பொருளுரைக்க.

(இ-ள்.)  ஒன்றாத்  தமரினும் - உடன்போக்கிற்கு  ஒன்றாத் தாயர்
முதலியோர்  கண்ணும்;  பருவத்தும்  -  இற்செறிப்பாற் புறம்போகற்கு
ஒன்றாமையானுந்   தலைவனொடு   கூட்டம்பெறாது  ஆற்றியிருக்கும்
பருவம்   ஒன்றாததானும்  ஒன்றாப்  பருவத்தின்கண்ணும்;   சுரத்தும்.
அரிய  சேய  கல்லதர் ஆகலிற் போதற்கு ஒன்றாச் சுரத்தின்கண்ணும்;
ஒன்றிய  தோழியொடு  வலிப்பினும்  -  தலைவி  வேண்டியதே தான்
வேண்டுதலிற்  பின்  தமர் கூறுங் கடுஞ்சொற் கேட்டற்கும் ஒருப்பட்டு
நொதுமலர்   வரவிற்காற்றாது   உடன்போக்கிற்கேலாத   டுங்கோடை
யெனக்  கருதாது  கொண்டு  தலைக்கழிதற்கு  ஒன்றிய  தோழியொடு
தலைவன்  ஆராய்ந்து உடன்போக்கினைத் துணியினும்; விடுப்பினும் -
தலைவியை   ஆற்றியிருப்பளெனக்  கருதி  உடன்கொண்டு போகாது
தலைவன் விடுப்பினும்;

இடைச்சுர     மருங்கின்   அவள்தமர்  எய்திக்  கடைக்கொண்டு
பெயர்த்தலிற்  கலங்கு  அஞர்எய்திக் கற்பொடு  புணர்ந்த  கௌவை
உளப்பட   அப்பால்   பட்ட   ஒரு   திறத்தானும்   -   தந்தையுந்
தன்னையரும்    இடைச்சுரத்திடத்தே    பின்சென்று    பொருந்தித்
தலைவியைப்   பெயர்த்தல்   வேண்டுதலிற்   றலைவி  மிகவருந்தித்
தமர்பாற்பட்டு உரையாடாது தலைவன் பாற்படுதலின், அவள் கற்பொடு
புணர்ந்தமை   சுற்றத்தாரும்   சுரத்திடைக்  கண்டோரும்  உணர்ந்த
வெளிப்பாடு  உளப்படக்  கொண்டு  தலைக்கழிதற் கூற்றின் கண்பட்ட
பகுதிக்கண்ணும்;

கடைக்கொண்  டெய்தியென்க.  கடை - பின் தமரெனவே தந்தை
தன்னையரை   உணர்த்திற்று.   ‘‘முன்னர்த்   தாய்நிலை  கண்டு
தடுப்பினு’’
(40) மென்றலின்,   தாயர்தாமே சென்றமை  முன்னத்தாற்
றமர் உணர்ந்து, வலிதிற்கொண்டு   அகன்றானோ வென்று  கருதியும்
அவ்வரைவு  மாட்சிமைப்படுத்தற்கும்  பின்சென்று அவள் பெயராமற்
கற்பொடு    புணர்ந்தமை    கண்டு,   தலைவன்  எடுத்துக்கொண்ட
வினைமுடித்தலும் ஒருதலை யென்றுணர்ந்து, பின்னர் அவரும்