நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   2333
Zoom In NormalZoom Out


மென்றுணர்க. இஃது அரசர்க்கே யுரித்து.

பாசறைப்  புலம்பலும்  - தலைவன் பாசறைக்கண் இருந்து தனக்கு
வெற்றி  தோன்றிய காலத்துந் தான் அவட்குக் கூறிப் போந்த பருவம்
வந்துழியுந்  தூது  கண்டுழியும்  அவள்  வருந்துவளென நினைத்துத்
தனிமை கூறும் இடத்தும்;

இதனைக்     ‘கிழவி நிலையே’ (தொல். பொ. கற். 45) என்னுஞ்
சூத்திரத்தான்  விலக்குவரெனின்,  அதற்கு  உம்மை  விரித்துக் கிழவி
நிலையை  வினைசெய்யாநிற்றலாகிய  இடத்து நினைந்து கூறினானாகக்
கூறார்;  வெற்றி நிகழுமிடத்துந் தான் குறித்த பருவம் வந்துழியுந் தூது
கண்டுழியும்    வருத்தம்    விளங்கிக்    கூற்றுத்   தோன்றுமென்று
பொருளாமென்றுணர்க.

முடிந்த  காலத்துப் பாகனொடு விரும்பிய வினைத்திற் வகையினும்
-வகையின்  வினைத்திறமுமென மாற்றுக. வேந்தன் எடுத்துக் கொண்ட
வினை  முடிந்த காலத்துத் தான் போக்கொருப்பட்டு நின்று பாகனொடு
விரும்பிக்     கூறிய     வகையின்கட்     டோன்றிய    வேறொரு
வினைத்திறத்திடத்தும்;

என்றது, அரசனுக்குப் பின்னும் ஒரு பகைமேற் சேறல் உளதாதலை.

காவற்பாங்கின் பக்கமும் -வேந்தன் றன்னாற் காக்கப்படுவனவாகிய
பகுதிகளின் கூற்றிற் பிரியுமிடத்தும்;

பகுதி     ஆகுபெயர்;   அவையானை  குதிரை முதலியவற்றைக்
காத்தலும்,   அரசர்க்குத்   தருமமாகிய  வேட்டையிற்சென்று  கடுமா
கொன்று ஏனையவற்றைக் காத்தலும் முதலியன.

ஆங்கோர் பக்கமும் -   அவன்   காத்தற்குரிய  பகுதிக்கண்ணே
நிற்பார் கூற்றிற் பிரியுமிடத்தும்;

அவர் தாபதர் முதலியோர் பலருமாம்.

பரத்தையின் அகற்சியிற் பரிந்தோட் குறுகி இரத்தலும் தெளித்தலும்
என    இருவகையோடு    -   பரத்தையிற்   பிரிதற்   காரணத்தாற்
பரிபுலம்பெய்திய   தலைவியை   எய்தி   இரத்தலும்  இரந்தபின்னர்
ஊடலுணர்த்தலும்  என்ற  இரு  பகுதியோடே;  உரைத்திற  நாட்டம்
கிழவோன் மேன - முற்கூறிய இடங்களிற் கூற்று நிகழுங் கூறுபாட்டை
நிலைபெறுத்துதல் தலைமகனிடத்தனவாம் எ-று.

உ-ம்:

‘‘ஆறுசெல் வருத்தவுஞ் சீறடி சிவப்பவுஞ்
சினைநீங்கு தளிரின் வண்ணம் வாடவுந்
தான்வர றுணிந்த விவளினு மிவளுடன்
வேய்பயி லழுவ முவக்கும்
பேதை நெஞ்சம் பெருந்தக வுடைத்தே’’

இது தோழியொடு வலித்தது.

‘அப்பாற்பட்ட ஒருதிறத்தானும்’  என்றதனானே,  தலைவியிடத்துத்
தலைவன் கூறுவன பலவுங் கொள்க.

உ-ம்:

‘‘வாள்வரி வயமான் கோளுகிர் அன்ன
செம்முகை யவிழ்ந்த முண்முதிர் முருக்கின்
சிதரல் செம்மல் தாஅய் மதரெழின்
மாணிழை மகளிர் பூ