நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   2341
Zoom In NormalZoom Out


ந்த துணையமை பிணையல்
மோயின ளுயிர்த்த காலை மாமலர்
மணியுரு விழந்த அணியழி தோற்றம்
கண்டே கடிந்தனஞ் செலவே ஒண்தொடி
யுழையம் ஆகவும் இனைவோள்
பிழையலள் மாதோ பிரிதுநாம் எனினே.’’      (அகம்.5)

‘‘இருங்கழி முதலை மேந்தோ லன்ன...ஞான்றே.’’ (அகம்.3)

இவை அகம்:

‘‘வேர்பிணி வெதிரத்துக் கால்பொரு நரலிசை
கந்துபிணி யானை யயாவுயிர்த் தாஅங்
கென்றூழ் நீடிய வேய்பயி லழுவத்துக்
குன்றூர் மதிய நோக்கி நின்றுநினைந்
துள்ளினெ னல்லனோ யானே முள்ளெயிற்றுத்
திலகந் தைஇய தேங்கமழ் திருநுத
லெமது முண்டோர் மதிநாட் டிங்க
ளுரறுகுரல் வெவ்வளி யெடுப்ப நிழல்தப
வுலவை யாகிய மரத்த
கல்பிறங்கு மாமலை யும்பரஃதெனவே.’’         (நற்.62)

இது  நற்றிணை. இவை தலைவிகண் நிகழ்ந்தனவும் அவடன்மையும்
பின்னர்த்  தலவைன்  நினைந்து செலவழுங்குதற்கு நிமித்த  மாயவாறு
காண்க. ‘‘அறியாய்   வாழி  தோழி  யிருளற’’ (அகம்.53) என்பது
தலைவன்கண்  நிகழ்ந்தது  தலைவி  நினைந்து  தோழிக்குக்  கூறியது.
‘‘நெஞ்சு நடுக்குற’’ என்னும் பாலைக்கலியும் (23) அது.

‘‘உறலியா மொளிவாட வுயர்ந்தவன் விழவினுள்
விறலிழை யவரொடும் விளையாடு வான்மன்னோ
பெறலரும் பொழுதொடு பிறங்கிணர்த் துருத்திசூழ்ந்
தறலாரும் வையையென் றறைகுந ருளராயின்.’’   (கலி.30)

இதுவும் அது.

‘‘ஈன்பருந் துயவும் வான்பொரு நெடுஞ்சினை
பொரியரை வேம்பின் புள்ளி நீழற்
கட்டளை யன்ன வட்டரங் கிழைத்துக்
கல்லாச் சிறாஅர் நெல்லிவட் டாடும்
வில்லே ருழவர் வெம்முனைச் சீறூர்ச்
சுரன்முதல் வந்த வுரன்மாய் மாலை
யுள்ளினெ னல்லனோ யானே யுள்ளிய
வினைமுடித் தன்ன வினியோண்
மனைமாண் சுடரொடு படர்பொழு தெனவே.’’    (நற்.3)

என்னும்     நற்றிணையும்     அது.     இவ்வாறன்றி     வேறுபட
வருவனவெல்லாம் இதனான் அமைக்க.                       (43)

தலைவியும் தோழியும் தலைவன்கண் நிகழ்ந்த கூற்றைக்
கூறிநிற்றலும் பாலையே ஆதல்
 

44. நிகழ்ந்தது கூறி நிலையலுந் திணையே.
 

இஃது ‘ஒன்றாத் தமரினும்’ (தொல். பொ.  அகத்.  41)  என்னுஞ்
சூத்திரத்திற்கொரு புறனடை கூறுகின்றது.

(இ-ள்.)  நிகழ்ந்தது கூறி. ஒன்றாத்தமரினும் என்னுஞ் சூத்திரத்துத்
தலைவன்கண்  நிகழ்ந்த  கூற்றினைத்  தலைவியுந்  தோழியுங்  கூறி,
நிலையலுந் திணையே.  அதன்கண்  நிலைபெற்று  நிற்றலும் பாலைத்
திணையாம் எ-று.

உ-ம்:

‘‘அரும்பொருள் வேட்கையி னுள்ளந் துரப்பப்
பிரிந்துறை சூழாதி யைய விரும்பிநீ
யென்றோ ளெழுதிய தொய்யிலும் யாழநின்
மைந்துடை மார்பிற் சுணங்கு நினைத்துக்காண்
சென்றோர் முகப்பப் பொருளும் கிடவாது
ஒழிந்தவ ரெல்லாரு முண்ணாதுஞ் செல்லா
ரிளமையுங் காமமு மோராங்குப் பொற்றார்
வளமை விழைதக்க துண்டோ வுளநா
ளொரோஒகை தம்முட் டழீஇ யொரோஒகை
யொன்றன் கூறாடை யுடுப்பவரே ஆயினும்
மொன்றினார் வாழ்க்கையே வாழ்க்கை யரிதரோ
சென்ற விளமை தரற்கு.’’                   (கலி.18)

இதனுள் ‘உளநாள்’ என்றது, நளது சின்மை; ‘அரிதரோ