நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   2343
Zoom In NormalZoom Out


தனித்து.’’

இது  குறைமொழிந்து வேண்டினமை தலைவன் கூறக்கேட்ட தோழி
கூறியது.‘‘அரிதாய வறனெய்தி’’(பாலைக்கலி.11) என்றது மூன்றன்பகுதி
(41) தலைவன் கூறக்கேட்ட தலைவி கூறியது.

‘‘யானெவன் செய்கோ தோழி பொறிவரி
வானம் வாழ்த்திப் பாடவும் அருளாது
உறைதுறந் தெழிலி நீங்கலிற் பறையுடன்
மரம்புல் லென்ற முரம்புயர் நனந்தலை
அரம்போழ் நுதிய வாளி அம்பின்
நிரம்பா நோக்கின் நிரையங் கொண்மார்
நெல்லி நீளிடை எல்லி மண்டி
நல்லமர்க் கடந்த நாணுடை மறவர்
பெயரும் பீடு மெழுதி அதர்தொறும்
பீலி சூட்டிய பிறங்குநிலை நடுகல்
வேலூன்று பலகை வேற்றுமுனை கடுக்கும்
மொழிபெயர் தேஎந் தருமார் மள்ளர்
கழிப்பிணிக் கறைத்தோல் நிரைகண் டன்ன
வுவலிடு பதுக்கை யாளுகு பறந்தலை
உருவில் பேஎய் ஊராத் தேரொடு
நிலம்படு மின்மினி போலப் பலவுடன்
இலங்குபரல் இமைக்கும் என்பநந்
நலந்துறந் துறைநர் சென்ற ஆறே.’’         (அகம்.67)

இது மண்டிலத்தருமை தலைவன் கூறக் கேட்ட தோழி கூறியது.

‘‘நம்நிலை யறியா ராயினுந் தம்நிலை
அறிந்தனர் கொல்லோ தாமே யோங்குநடைக்
காய்சின யானை கங்குல் சூழ
அஞ்சுவர விறுத்த தானை
வெஞ்சின வேந்தன் பாசறை யோரே’’       (அகம்.264)

இது தலைவன்  பாசறைப் புலம்பினமை கூறக்கேட்ட தலைவி ‘‘நம்
நிலை  அறியாராயினும்’’  எனக் கூறினாள். ‘‘திசை திசை தேனார்க்குந்
திருமருத  முன்றுறை’’ என்பது (கலி.26) காவற் பாங்கின்கட் டலைவன்
கூறியது கேட்ட தலைவி கூறியது. பிறவும் வருவனவெல்லாம் இதனான்
அமைக்க.                                              (44)

மரபு திரியாமல் சில பொருள்கள் திணைகளிடை விரவுதல்
 

45. மரபுநிலை திரியா மாட்சிய வாகி
விரவும் பொருளும் விரவும் என்ப.
 

இது மரபியலுட்   கூறப்படும் மரபன்றி   அகத்திணைக்கு  உரிய
மரபுகள் கூறுகின்றது.

(இ-ள்.)  மரபுநிலை  திரியா  மாட்சிய ஆகி - புலனெறி வழக்கஞ்
செய்துவருகின்ற  வரலாற்று  முறைமை திரியாத மாட்சியவாகி; விரவும்
பொருளும் விரவும் என்ப - பாலைத்  திணைக்குங் கைக்கிளை பெருந்
திணைக்கும்  உரியவாய்  விரவும்   பொருளும்  ஏனைத் திணைக்கும்
உரியவாய்  விரவும்  பொருளும்  விரவி  வருமென்று கூறுவர் புலவர்
எ-று.

அவை  தலைவி  ஆற்றாமை  கண்டுழிப் பிரிந்த தலைவன் மீண்டு
வந்தானெனத்  தோழி கூறுவனவும், வரைவிடை வைத்துப் பிரிந்தோன்
தலைவியை   நினைந்து  வருந்திக்  கூறுவனவும்,  உடன்  போயவழி
இடைச்சுரத்து நிகழ்ந்ததனை மீண்டும் வந்துழித் தலைவன் றோழிக்குக்
கூறுவனவும்,  யானினைத்த  வெல்லை  யெல்லாம்  பொருள் முடித்து
வாராது   நின்னல   நயந்து   வந்தேனெனத்   தலைவன்   கூறலும்,
பொருள்வயிற்  பிரிந்தோன்  தலைவியை  நினைந்து  வருந்துவனவும்,
இடைச்