நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   2345
Zoom In NormalZoom Out


பொருள் கொண்டு நின்னலம் நயந்து வந்தேன் என்றது. இது

‘‘அளிதோ தானே நாணே யாள்வினை
யெளிதென லோம்பன்மி னறிவுடை யீரே
கான்கெழு செலவின் னெஞ்சுபின் வாங்கத்
தான்சென் றனனே தமிய னதாஅன்
றென்னா வதுகொறானே பொன்னுடை
மனைமாண் டடங்கிய கற்பிற்
புனையீ ரோதி புலம்புறு நிலையே”

இது செலவு கண்டோர் கூறியது.

“மரந்தலை மணந்த நனந்தலைக் கானத்
தலந்தலை ஞெமையத் திருந்த குடிஞை
பொன்செய் கொல்லனி னினிய தெளிர்ப்பப்
பெய்ம்மணி யார்க்கு மிழைகிளர் நெடுந்தேர்
வன்பான் முரம்பி னேமி யதிரச்
சென்றிசின் வாழியோ பனிக்கமு நாளே
யிடைச்சுரத் தெழிலி யுறைத்தென மார்பிற்
குறும் பொறிக் கொண்ட சாந்தமொடு
நறுங்கண் ணியன்கொ னோகோ யானே”       (நற்.394)

இந் நற்றிணை வரவுகண்டோர் கூறியது.

‘‘இனைந்துநொந் தழுதன ணினைந்துநீ டுயிர்த்தன
ளெல்லையு மிரவுங் கழிந்தன வென்றெண்ணி யெல்லிரா
நல்கிய கேள்வ னிவன்மன்ற மெல்ல
மணியுட் பரந்தநீர் போலத் துணிவாங்
கலஞ்சிதை யில்லத்துக் காழ்கொண்டு தேற்றக்
கலங்கிய நீர்போற் றெளிந்து நலம்பெற்றா
ணல்லெழின் மார்பனைச் சார்ந்து’’           (கலி.142)

இது பெருந்திணைக்கட் கண்டோர் கூறியது.

‘‘குரவை தழீஇயா மரபுளி பாடித்
தேயா விழுப்புகழ்த் தெய்வம் பரவுதும்
மாசில்வான் முந்நீர் வளைஇய தொன்னிலம்
ஆளுங் கிழமையொடு புணர்ந்த
வெங்கோ வாழியரிம் மலர்தலை யுலகே’’      (கலி.103)

இச்     சுரிதகத்துக்  குரவையாடல்  ஏறுகோடற்  கைக்கிளையுள்
விராய்வந்தவாறுங்    குரவைக்குரிய   தெய்வத்தையன்றி   அரசனை
வாழ்த்திய  வாழ்த்து  விராய்வந்தவாறுங் கொள்க. ‘விரவும் பொருளும்
விரவு’  மெனவே ஆய்ச்சியர் குரவைக்கூத்தல்லது வேட்டுவவரிக்குரிய
வெறியாடல் விரவாதென்றுணர்க. இஃது எண்வகைச் சுவையான் வரும்
மெய்ப்பாடுங்   கூத்தொடும்   படுதலின்   அச்சுவை   பற்றி  வரும்
மெய்ப்பாட்டிற்கும் உரித்தாயிற்று.

இனிக் ‘காவற்பாங்டிகின் ஆங்கோர் பக்கத்’தின் (தொல். பொ. 41)
தலைவன்  கூறியவற்றைக்  கற்பியலுள்,  தலைவன்  பகுதியி னீங்கிய
தகுதிக்கட்’ (தொல். பொ. கற். 9) டலைவி பரத்தையராகக் கூறுவனவும்
இச்சூத்திரத்தான்  அமைக்க.  அவை  மருதக்கலியுட்  ‘கடவுட்பாட்டு’
முதலியன.  (கலி.  93,  95,  96,  97) அவற்றை ஆண்டுக் காட்டுதும்;
கண்டுணர்க.

இனித் தலைவி கற்பினுட் பிரிவாற்றாது எம்மையும் உடன் கொண்டு
சென்மினென்பனவும்,   அவன்   அவட்கு   மறுத்துக்  கூறுவனவும்
இதனான் அமைக்க.

உ-ம்:

‘‘மரையா மரல்கவர மாரி வறப்ப
வரையோங் கருஞ்சுரத் தாரிடைச் செல்வோர்
சுரையம்பு மூழ்கச் சுருங்கிப் புரையோர்த
முண்ணீர் வறப்பப் புலர்வாடு நாவிற்குத்
தண்ணீர் பெறாஅத் தடுமாற் றருந்துயரங்