கண்ணீர் நனைக்குங் கடுமைய காடென்றா லென்னீ ரறியாதீர் போல விவைகூறி னின்னீர வல்ல நெடுந்தகா யெம்மையு மன்பறச் சூழாதே யாற்றிடை நும்மொடு துன்பந் துணையாக நாடி னதுவல்ல தின்பமு முண்டோ வெமக்கு’’
(கலி.6)
இக் கலி எம்மையும் உடன் கொண்டு சென்மினென்றது.
‘‘செருமிகு சினவேந்தன்’’ என்னும் பாலைக்கலியுள்,
‘‘எல்வளை யெம்மொடு நீவரின் யாழநின் மெல்லியன் மேவந்த சீறடித் தாமரை யல்லிசே ராயித ழரக்குத்தோய்ந் தவைபோலக் கல்லுறி னவ்வடி கறுக்குந வல்லவோ’’
(கலி.13)
இது தலைவிக்குத் தலைவன் உடன் போக்கு மறுத்துக் கூறியது. இதன் சுரிதகத்து,
‘‘அனையவை காதலர் கூறலின் வினைவயிற் பிரிகுவ ரெனப்பெரி தழியாதி’’
(கலி.13)
என வினைவயிற்பிரிவு கூறலின் இது கற்பிற் கூறியதாயிற்று.
இன்னும் இச் சூத்திரத்தான் அமைத்தற்குரிய கிளவிகளாய் வருவனவெல்லாம் அமைத்துக்கொள்க.
அகத்திணைப்பொருளை உணரவரும் உவமங்கள்
|