னின்ற தமைரைத்தனிமலர்,
தனக்கு வருத்தஞ் செய்யும் பனி ஒரு கூற்றிலே
வடியாநிற்கத்,
தான்
மிகச்செவ்வியின்றி அலருந்துறையினையுடைய ஊர எ-று.
இதனுள் வைகறைக்காலத்து
மனைவயிற் செல்லாது, இளைய செவ்வியையுடைய பரத்தையரைப் புணர்ந்து விளையாடி, அதனானும் அமையாது, பின்னும் அவரைப் புணர்தற்குச் சூழ்ந்து திரிகின்ற இவ்வூரிடத்தே, நின்னைப்பெறாது, சுற்றத்திடத்தேயிருந்து கண்ணீர் வாராநிற்க, நீ ஒருகால் அளித்தலிற், சிறிது செவ்வி பெற்றாளா யிருக்கும் படி வைத்த தலைவியைப் போலே, எம்மையும் வைக்கின்றாயென்று, காமக்கிழத்தி உள்ளுறைவுவமங் கூறினாள். துனி மிகுதலாலே பெருக்கு மாறாது வீழ்கின்ற கண்ணீர் காமத்தீயாற் சுவறி அறுதலை உடைத்தாயொழுக, அவ் வருத்தத்தைக் கண்டு விரைந்து கணவன் அருளுதலிற் சிறிது மகிழ்பவள் முகம் போல என்ற ஏனை யுவமம், தாமரைமலர் பனிவாரத் தளைவிடுமென்ற உள்ளுறை யுவமத்தைத் தருகின்ற கருப்பொருட்குச் சிறப்புக் கொடுத்து நின்றது.
இஃது,
‘‘உடனுறை யுவமஞ் சுட்டுநகை சிறப்பெனக்
கெடலரு மரபி னுள்ளுறை யைந்தே’’
(தொ. பொ. பொருளியல் 42)
என்ற பொருளியற் சூத்திரத்திற்
சிறப்பென்ற உள்ளுறை. இவ் வேனையுவமம் உள்ளுறையுவமத்திற்குச் சிறப்புக்கொடுத்து உள்ளுறை யுவமம்போலத் திணையுணர்தலைத் தள்ளாது நின்றவாறு காண்க.
இஃது,
‘‘இனிதுறு கிளவியுந் துனியுறு கிளவியு முவம மருங்கிற் றோன்று மென்ப’’
(தொல். பொ. உவ. 28)
என உவமப்போலிக்குக் கூறுதலின் அவ்விரண்டுந் தோன்றி நின்றது.
‘‘ஏனோர் கெல்லா மிடம்வரை வின்றே’’
(தொல். பொ. உவ. 27)
என்று உவமப்போலியிற்
கூறுதலாற் காமக்கிழத்தியும் உள்ளுறையுவமங்
கூறினாள்.
குறிஞ்சியிலும்
மருதத்திலும் நெய்தலிலும் இவ்வாறு வரும் கலிகளும்,
‘‘யானே ஈண்டை யேனே யென்னலனே யேனல் காவலர் கவணொடு வெரீஇக் கான யானை கைவிடு பசுங்கழை மீனெறி தூண்டிலி னிவக்கும் கானக நாடனோ டாண்டொழிந் தன்றே’’
(குறுந்.54)
என்னும் இக் குறுந்தொகைபோல வருவனவும் இச் சூத்திரத்தான் அமைக்க. பேராசிரியரும் இப்பாட்டின் ‘மீனெறி தூண்டி’லென்றதனை ஏனையுவமமென்றார்.
இனித் தள்ளாதென்றதனானே,
‘‘பாஅ லஞ்செவி’’ என்னும் பாலைக்கலியுட் (5) டாழிசை மூன்றும் ஏனையுவமமாய் நின்று கருப்பொருளொடு கூடிச் சிறப்பியாது தாமே திணைப் பொருள் தோன்றுவித்து நிற்பன
|