நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   2361
Zoom In NormalZoom Out


கத் தோன்றும் பதினான்கு துறையினையுடைத்து எ-று.

அகத்திணைக்கண்     முதல்  கரு வுரிப்பொருள் கூறிய குறிஞ்சி
முல்லை  மருதம்  நெய்தல் என்பனவற்றிற்கு வெட்சி வஞ்சி உழிஞை
தும்பை யென்பன அவ்வவ் விலக்கணங்களோடு ஒருபுடை யொப்புமை
பற்றிச்   சார்புடையவாதலும்,   நிலமில்லாத   பாலை  பெருந்திணை
கைக்கிளை      யென்பனவற்றிற்கு       வாகையுங்     காஞ்சியும்
பாடாண்டிணையும்  பெற்ற  இலக்கணத்தோடு  ஒருபுடை யொப்புமை
பற்றிச் சார்புடைய வாதலுங் கூறுதற்கு ‘அரில்தபவுணர்ந்தோ ரென்றார்.
ஒன்று  ஒன்றற்குச்  சார்பாமாறு  அவ்வச்  சூத்திரங்களுட்  கூறுதும்.
தானே  யென்றார்,  புறத்திணை  பலவற்றுள்  ஒன்றை  வாங்குதலின்
பாடாண்டினை  ஒழிந்தனவற்றிற்கும்  இஃதொக்கும். களவொழுக்கமுங்
கங்குற்   காலமுங்   காவலர்   கடுகினுந்  தான்  கருதிய பொருளை
இரவின்கண்   முடித்து   மீடலும்   போல்வன   ஒத்தலின்  வெட்சி
குறிஞ்சிக்குப்   புறனென்றார்.  வெட்சித்  திணையாவது  களவின்கண்
நிரைகொள்ளும்  ஒழுக்கம்.  இதற்கு  அப்பூச் சூடுதலும் உரித்தென்று
கொள்க.   வேற்றுப்புலத்து  வாழும்  பார்ப்பார்  முதலியோர் அஞ்சி
அரண்   சேர்வதோர்  உபாயமாதலின் ‘உட்குவரத்தோன்று’மென்றார்.
மக்களும்   மாவும்   முதலியன   சென்று   நீருண்ணுந்துறைபோலப்
பலவகைப்பட்ட     பொருளும்    ஒருவகைப்பட்டு   இயங்குதலாகு
மார்க்கமாதலிற்  றுறையென்றார்.  எல்லாவழியு மென்பதனை எல்லாத்
துறையுங்   காவல்போற்றினார்  என்பவாகலின்.  எனவே,  திணையுந்
துறையுங்     கொண்டாராயிற்று.     அகத்திணைக்குத்     துறையுட்
பகுதிகளெல்லாம்  விரித்துக்கூறிப் பின்னும் பன்முறையாற் பரந்துபட்டு
வரம்பிகந்தனவற்றையுந்  தொகுத்துத்  துறைப்படுத்துக்  கிளவி  கூறுக
என்றற்குச்  செய்யுளியலுள்  துறை  யென்பது (பொ. 521)  உறுப்பாகக்
கூறினார்.   புறத்திணைக்கு   அங்ஙனம்   பரந்துபட  விரித்தோதாது
தொகுத்து   இலக்கணஞ்   செய்தாராயினும்   அவையும்  அவ்வாறே
பலபொருட்பகுதியும்  உடையவென்பது உணர்த்துதற்குத்  துறையெனப்
பெயராகக்  கொடுத்தார். இதனானே அகப்பொருட் பகுதி பலவாயினும்
ஒரு செய்யுளுட் பலபொருள் விராஅய்வரினும்,