தோற்றோர்க்குக் கொற்றம் வேண்டியும் வென்றோர்க்கும் மேற்செல்லுங்காற் கொற்றம் வேண்டியும் வழிபடு வராதலின்.
இனிக் கொற்றவைநிலைப் பகுதியுட் சில வருமாறு:-
‘‘நச்சிலைவேற் காளைக்கு நாளையே கொற்றவை கைச்சிலையு நல்கும்யாங் காணேங்கொல் - மிச்சில்கூர் வாளின்வாய்த் தீண்டாத வார்குருதி மெய்சாய்ப்பத் தாளின்வாய் வீழ்த்தான் றலை.’’
இஃது உயிர்ப்பலி; இது
பொதுவகையான் இருவகை வெட்சிக்கும் வஞ்சிக்கும் பொது.
‘‘ஆடிப்பண் பாடி யளவின்றிக் கொற்றவை பாடினி பாடற் படுத்துவந்தா - ணாடிய தோளுழலை யாடுவோன் றோளினுந் தூக்கமைத்த தாளுழலை யடுவோன் றாள்.’’
இது குருதிப்பலி;
பொதுவகையான் இருவகை வெட்சிக்கும் வஞ்சிக்கும் பொது.
புறத்திணை வழுஏழ் ஆவன
|