பிற்கூறினார்,
வெறியறி
சிறப்பன்மையும் ஆண்பாற்கும் பெண்பாற்கும் பொதுவாதல்லது அகத்திணைக்கண் வந்து பொதுவாகாமையும் பற்றி.
வயவர்
ஏத்திய ஓடாக் கழனிலை உளப்பட - முன்பு கழல் கால் யாத்த வீரர் இளமைப் பருவத்தானொருவன் களத்திடை ஓடாது நின்றமை கண்டு அவனைப் புகழ்ந்து அவற்குக் கட்டிய கழனிலைக் கூத்து.
ஓடாமையாற்
கட்டின கழல், ஏத்திய நிலையாற் கட்டின கழல். இது வள்ளிப்பின் வைத்தலின் இருபாலாரும் ஆடுதல் கொள்க. கொடி முதலியன அவனை வியந்து கொடுத்தல் அத்துறைப் பகுதியாம்.
உ-ம்:
‘‘மீளாது பெற்ற விறற்கழலோன் வாளாட்டின் வாளாடு கூத்திவந் தாடினாள் - வாளாட்டின் மண்ணாளு மன்னரே பெண்ணாவார் வண்மைக்குப் பெண்ணாடின் யாதாம் பிற’’
ஓடா
உடல் வேந்து அடுக்கிய உன்னநிலையும் - பிறக்கடியிடா உடன்ற வேந்தனை உன்னமரத்துடன் அடுக்கிக்
கூறப்பட்ட உன்ன நிலையும்;
என்றது,
வேந்தன் கருத்தானன்றி அவன் மறவன், ‘வேந்தற்கு நீ வென்றிகொடுத்தால் யான் நினக்கு இன்னது செய்வ’லெனப் பரவுதலும், ‘எம்வேந்தற்கு ஆக்கம் உளதெனில் அக்கோடு பொதுளக’ எனவும் ‘பகைவேந்தற்கு ஆக்கம்
உளதெனில் அக்கோடு படுவதாக’ எனவும் நிமித்தங்கோடலும், என விருவகைத் தெய்வத் தன்மை; அஃதுடைமை யான் ‘அடுக்கிய உன்ன நிலையு’ மென்றார்.
உ-ம்:
‘‘துயிலின் கூந்தற் றோளிணைப் பேதை வெயினிழ லொழிய வெஞ்சுரம் படர்ந்து செய்பொருட் டிறவீ ராகிய நும்வயி னெனக்கொன்று மொழியின ளாகத் தனக்கே யருநகை தோன்றிய வழுகுரற் கிளவியள் கலுழ்கண் கரந்தனடானே யினியே மன்னவற் பராஅய் முன்னியது முடித்தோ ருன்னஞ் சிறக்கு மொள்வினை நினைஇத் தலைசாய்த் திருந்த சிலைவலம் போற்றி வேந்து வழக்கறுத்த கான நீந்த லொல்லுமோ பூந்தொடி யொழிந்தே’’
இதனுள்,
‘‘மன்னவற் பராஅய் முன்னியது முடித்தோ ருன்னஞ் சிறக்கு மொள்வினை நினைஇ’’
என்றது, வேந்தனைப் பரவுக்கடனாக அடுக்கிய உன்னநிலை.
‘‘முன்னங் குழையவுங் கோடெலா மொய்தளிரீன் றுன்னங் குழையொலித் தோங்குவாய் - மன்னரைக் கொன்று களங்கொள்ளுங் கொல்யானை வேந்தனை வென்றுகளங் கொள்ளுமேல் வேந்து.’’
இவை மறவர் செய்தலிற் றன்னுறு தொழிலாம்.
‘‘பொன்னின் அன்ன பூவின் சிறியாலைப் புன்கால் உள்ளத்துப்
|