நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   2381
Zoom In NormalZoom Out


நடுதல்  -  கல்லினை   நடுதலும்,   அக்  கல்லின்கண்  மறவனை
நடுதலுமென இருவகையாம்;

உ-ம்:

‘‘சீர்த்த துகளிற்றாய்த் தெய்வச் சிறப்பெய்த
நீர்ப்படுத் தற்கு நிலைகுறித்துப் - போர்க்களத்து
மன்னட்ட வென்றி மறவோன் பெயர்பொறித்துக்
கன்னட்டார் கல்சூழ் கடத்து.’’

இது கல் நாட்டியது.

‘‘கோள்வாய்த்த சீயம்போற் கொற்றவர்தம் மாவெறிந்து
வாள்வாய்த்து வீழ்ந்த மறவேலோய் - நாள்வாய்த்
திடைகொள லின்றி யெழுத்துடைக் கல்வாய்
மடைகொளல் வேண்டும் மகிழ்ந்து.’’

இது மறவனை நாட்டியது.

சீர்த்தகு  சிறப்பிற் பெரும்படை - அவன் செய்த புகழைத் தகும்படி
பொறித்தலும்,    அக்கல்லைத்   தெய்வமாக்கி   அதற்குப்   பெருஞ்
சிறப்புக்களைப் படைத்தலுமென இருவகையாம்;

உ-ம்:

‘‘கைவினை மாக்கள் கலுழக்க ணோக்கிழந்து
செய்வினை வாய்ப்பவே செய்தமைத்தார்-மொய்போர்
மறவர் பிணம்பிறக்கி வாள்வாய்த்து வீழ்ந்தோன்
பிறபெயர்சூழ் கன்மேற் பெரிது.’’

இது பெயர் முதலியன பொறித்தது.

‘‘அன்றுகொ ளாபெயர்த் தாரமரில் வீழ்ந்தோன்கற்
கின்றுகொள் பல்லா னினமெல்லாங் - குன்றாமற்
செய்ம்மினோ சீர்ப்பச் சிறப்பாகத் தீபங்கள்
வைம்மினோ பீடம் வகுத்து.’’

இஃது அதற்குச் சிறப்புப் படைத்தது.

வாழ்த்தல்  - கால் கொள்ளுங்கால் தெய்வத்திற்குச் சிறப்புச் செய்து
வாழ்த்தலும்,    பின்னர்    நடப்பட்ட   கல்லினைத்   தெய்வமாக்கி
வாழ்த்தலுமென இருவகையாம்.

உ-ம்:

‘‘ஆவாழ் குழக்கன்றுய் வித்துக் களத்தவிந்த
நீவாழ வாழிய நின்னடுக - லோவாத
விற்கோட்ட நீண்டதோள் வேந்தன் புலிபொறித்த
பொற்கோட் டிமயமே போன்று.’’

இது கல்வாழத்து.

‘‘பெருங்களிற் றடியின்’’ என்று (263) புறப்பாட்டில் ‘தொழாதனை
கழித லோம்புமதி’ என வாழ்த்தியவாறு காண்க.

என்று  இருமூன்று  வகையிற்  கல்லொடு புணர. என்று முன்னர்க்
கூறப்பட்ட  அறுவகை  இலக்கணத்தையுடைய  கல்லொடு  பின்னரும்
அறுவகை     இலக்கணத்தையுடைய    கற்கூடச்;    சொல்லப்பட்ட
-இக்கூறப்பட்ட  பொதுவியல்;  எழு  மூன்று  துறைத்து. இருபத்தொரு
துறையினையுடைத்து எ-று.

ஆரம  ரோட்டன்  முதலிய  எழுதுறைக்குரிய   மரபினையுடைய
கரந்தையும்,  அக் கரந்தையே யன்றி முற்கூறிய கல்லோடே பிற்கூறிய
கல்லுங் கூடக், காந்தளும் பூவும் வள்ளியுங் கழனிலையும் உன்ன