நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   2384
Zoom In NormalZoom Out


வஞ்சித்திணை இலக்கணம்
 

60.எஞ்சா மண்ணசை வேந்தனை வேந்தன்
அஞ்சுதகத் தலைச்சென் றடல்குறித் தன்றே.
 

இது      முல்லைக்குப்       புறனென்ற       வஞ்சித்திணை
இன்னபொருட்டென்கின்றது.

(இ-ள்.) எஞ்சா மண் நசை - இருபெருவேந்தர்க்கும் இடையீடாகிய
மண்ணிடத்து  வேட்கையானே;  அஞ்சுதகத் தலைச்சென்று - ஆண்டு
வாழ்வோர்க்கு அஞ்சுதலுண்டாக அந்நாட்டிடத்தே சென்று; வேந்தனை
வேந்தன்  அடல்  குறித்தன்று  -  ஒரு  வேந்தனை  ஒரு  வேந்தன்
கொற்றங்கோடல் குறித்தல் மாத்திரைத்து வஞ்சித்திணை எ-று.

ஒருவன்    மண்ணசையான்     மேற்சென்றால்      மற்றவனும்
அம்மண்ணழியாமற்   காத்தலுக்கு  எதிரே  வருதலின்,  இருவர்க்கும்
மண்ணசையான்   மேற்சேறல்  உளதாகலின்,  அவ்விருவரும்  வஞ்சி
வேந்த   ராவரென்றுணர்க.   எதிர்சேறல்   காஞ்சி  என்பராலெனின்,
காஞ்சியென்பது   எப்பொருட்கும்  நிலையாமை  கூறுதலிற்  பெரிதும்
ஆராய்ச்சிப்படும்  பொதுவியற் பொருண்மைப் பெயராற் கூறலாகாமை
யுணர்க.    ஒருவன்    மேற்சென்றுழி    ஒருவன்   எதிர்செல்லாது
தன்மதிற்புறத்து   வருந்துணையும்  இருப்பின்,  அஃது  உழிஞையின்
அடங்கும்.   அது   சேரமான்   செல்வுழித்  தகடூரிடை  அதிகமான்
இருந்ததாம்.  இங்ஙனம்  இருவரும் வஞ்சிவேந்தரெனவே, மேற்கூறும்
துறை பதின்மூன்றும் இருவர்க்கும் ஒப்பக் கூறலா மென்றுணர்க.    (7)

வஞ்சி பதின்மூன்று துறைத்து ஆதல்
 

61.இயங்குபடை யரவ மெரிபரந் தெடுத்தல்
வயங்க லெய்திய பெருமை யானுங்
கொடுத்த லெய்திய கொடைமை யானும்
அடுத்தூர்ந்து அட்ட கொற்றத் தானும்
மாராயம் பெற்ற நெடுமொழி யானும்
பொருளின் றுய்த்த போராண் பக்கமும்
வருவிசைப் புனலைக் கற்சிறை போல
வொருவன் றாங்கிய பெருமை யானும்
பிண்ட மேய பெருஞ்சொற்று நிலையும்
வென்றோர் விளக்கமுந் தோற்றோர் தேய்வுங்
குன்றாச் சிறப்பிற் கொற்ற வள்ளையும்
அழிபடை தட்டோர் தழிஞ்சியொடு தொகைஇக்
கழிபெருஞ் சிறிப்பிற் றுறைபதின் மூன்றே.
இது முற்கூறிய வஞ்சித்திணை பதின்மூன்றுதுறைத் தென்கிறது.
 

(இ-ள்.)   இயங்கு    படை    அரவம்     -     இயங்குகின்ற
இருபடையெழுச்சியின் ஆர்ப்பரவமும்;

உ-ம்:

‘‘விண்ணசைஇச் செல்கின்ற வேலிளையா ரார்ப்பெடுப்ப
மண்ணசைஇச் செல்கின்றான் வாள்வேந்த. னெண்ண
மொருபாற் படர்தரக்