நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   2386
Zoom In NormalZoom Out


இஃது இருவருக்கும் பொது.

கொடுத்தல்   எய்திய கொடைமையானும் - மேற்செல்லும் வேந்தர்
தத்தம்   படையாளர்க்குப்   படைக்கல   முதலியன   கொடுத்தலும்,
பரிசிலர்க்கு அளித்தலும் ஆகிய கொடுத்தலைப் பொருந்திய கொடைத்
தொழிலும்;

உ-ம்:

‘‘வேத்தமர் செய்தற்கு மேற்செல்வான் மீண்டுவந்
தேத்துநர்க் கீதுமென் றெண்ணுமோ - பாத்தி
யுடைக்கலி மான்றே ருடனீந்தா னீந்த
படைக்கலத்திற் சாலப் பல.’’

என வரும்.

‘‘சிறா அர் துடியர் பாடுவன் மகாஅர்
தூவெள் ளறுவை மாயோற் குறுகி
யிரும்புட் பூசலோம்புமின் யானும்
விளரிக் கொட்பின் வெண்ணரி கடிகுவெ
னெம்போற் பெருவிதுப் புறுக வேந்தே
கொன்னுஞ் சாதல் வெய்யோற்குத்தன்றலை
மணிமருண் மாலை சூட்டி யவன்தலை
யொருகாழ் மாலை தான்மலைந் தனனே.’’      (புறம்.291)

என்பதும் அது.

அடுத்து  ஊர்ந்து அட்ட கொற்றத்தானும் - எடுத்துச் சென்ற இரு
பெருவேந்தர்  படையாளர்  வரவறியாமல்  இரவும் பகலும் பலகாலும்
தாம் ஏறி அந் நாட்டைக் காவல் புரிந்தோரைக் கொன்ற கொற்றமும்;

உ-ம்:

‘‘நீணில வேந்தர் நாட்செல் விருப்பத்துத்
தோள்சுமந் திருத்த லாற்றா ராள்வினைக்
கொண்டி மாக்க ளுண்டியின் முனிந்து
முனைப்புல மருங்கி னினைப்பருஞ் செய்வினை
வென்றியது முடித்தனர் மாதோ
யாங்குள கொல்லினி யூங்குப்பெறுஞ் செருவே’’

என வரும்.

‘‘யாண்டு தலைப்பெயர வேண்டுபுலத் திறுத்து
முனையெரி பரப்பிய துன்னருஞ் சீற்றமொடு
மழைதவழ்பு தலைஇய மதின்மர முருக்கி
நிரைகளி றொழுகிய நிரைய வெள்ளம்
பரந்தாடு கழங்கழி மன்மருங் கறுப்பக்
கொடிவிடு குரூஉப்புகை பிசிரக் கால்பொர
வழல்கவர் மருங்கி னுருவறக் கெடுத்துத்
தொல்கவி னழிந்த கண்ணகன் வைப்பின்
வெண்பூ வேளையொடு பைஞ்சுரை கலித்துப்
பீரிவர்பு பரந்த நீரறு நிறைமுதற்
சிவந்த காந்தண் முதல்சிதை மூதிற்
புலவுவில் லுழவிற் புல்லாள் வழங்கும்
புல்லிலை வைப்பிற் புலஞ்சிதை யரம்பி
னறியா மையான் மறந்துதுப் பெதிர்ந்தநின்
பகைவர் நாடுங் கண்டுவந் திசினே
கடலவுங் கல்லவும் யாற்றவும் பிறவும்
வளம்பல நிகழ்தரு நனந்தலை நன்னாட்டு
விழவறு பறியா முழவிமிழ் மூதூர்’’ 
       (பதிற்றுப்.15)

என்னும் பதிற்றுப்பத்தும் அழிவு கூறிய இடம் அப்பாற்படும்.

மாராயம் பெற்ற நெடுமொழியா