நும் அரசு மோம்புமி னொளிறேந்து மருப்பினுங் களிறும் போற்றுமின் எனை நாட் டாங்குநும் போரே யனைநா ளெறியா ரெறிதல் யாவண தெறிந்தோ ரெதிர்சென் றெறிதலுஞ் செல்லா னதனா லறிந்தோர் யாரவன் கண்ணிய பொருளே பலமென் றிகழ்த லோம்புமி னுதுக்காண் நிலனளப்பன்ன நில்லாக் குறுநெறி வண்பரிப் புரவிப் பண்புபா ராட்டி எல்லிடைப் படர்தந் தோனே கல்லென வேந்தூர் யானைக் கல்ல தேந்துவன் போலான்ற னிலங்கிலை வேலே.’’
(புறம்.301)
இதுவு மது.
வருவிசைப்
புனலைக் கற்சிறை போல ஒருவன் தாங்கிய பெருமையானும் - தன்படை நிலையாற்றாது பெயர்ந்தவழி விசையொடும் வரும் பெருநீரைக் கல்லணை தாங்கினாற்போலத் தன்மேல்வரும் படையினைத் தானே தடுத்த பெருமையும்;
உ-ம்:
‘‘கார்த்தரும் புல்லணற் கண்ணஞ்சாக் காளைதன் றார்ப்பற்றி யேர்தரு தோணோக்கித் தார்ப்பின்னர் ஞாட்பினுள் யானைக் கணநோக்கி யாடுப்பின் றேர்க்குழா நோக்கித்தன் மாநோக்கிக் - கூர்த்த கணைவரவு நோக்கித்தன் வேனோக்கிப் பின்னைக் கிணைவனை நோக்கி நகும்’’
(தகடூர் யாத்திரை.புறத்திரட்டு.1370)
என வரும்.
இது பொன்முடியார்
ஆங்கவனைக் கண்டு கூறியது.
‘‘வேந்துடைத் தானை முனைகெட நெரிதர வேந்துவாள்
வலத்த னொருவ னாகித் தன்னிறந்து வாராமை விலக்கலிற் பெருங்கடற் காழி யனையன் மாதோ வென்றும் பாடிச் சென்றோர்க் கன்றியும் வாரிப் புரவிற் காற்றாச் சீறூர்த் தொன்மை சுட்டிய வண்மை யோனே’’
(புறம்.330)
என்பதும் அது.
‘‘வருகதில்வல்லே’’
என்னும் (287) புறப்பாட்டும் அதன் பாற்படும்.
முன்னர் மாராயம் பெற்றவனே பின்னர் இரண்டு துறையும் நிகழ்த்துவான் என்றுணர்க.
பிண்டம்
மேய பெருஞ்சோற்றுநிலையும் - வேந்தன் போர்தலைக் கொண்ட பிற்றைஞான்றுதானே போர்க்குறித்த படையாளருந் தானும் உடனுண்பான்
போல்வதொரு முகமன் செய்தற்குப் பிண்டித்து வைத்த உண்டியைக் கொடுத்தல் மேயின பெருஞ்சோற்று
நிலையும்;
உ-ம்:
‘‘இணர்ததை ஞாழற் கரைகெழு பெருந்துறை மணிக்கலத் தன்ன மாயிதழ் நெய்தற் பாசடைப் பனிக்கழி துழைஇப் புன்னை வாலிணர்ப் படுசினை குருகிறை கொள்ளு மல்குறு கான லோங்குமண லடைகரைத் தாழடும்பு மலைந்த புணரிவளை ஞரல விலங்குகதிர் முத்தமொடு வார்துகி ரெடுக்குந் தண்கடற் படப்பை மென்பா லனவுங் காந்தளங் கண்ணிக் கொலைவில் வேட்டுவர் செங்கோட் டாமா
னூனொடு
|