நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   2389
Zoom In NormalZoom Out


காட்ட
மதனுடை வேழத்து வெண்கோடு கொண்டு
பொன்னுடை நியமத்துப் பிழிநொடை கொடுக்கும்
குன்றுதலை மணந்த புன்புல வைப்புங்
கால மன்றியுங் கரும்பறுத் தொழியா
தரிகா லவித்துப் பல்பூ விழவிற்
றேம்பாய் மருத முதல்படக் கொன்று
வெண்டலைச் செம்புனல் பரந்துவாய் மிகுக்கும்
பலசூழ் பதப்பர் பரிய வெள்ளத்துச்
சிறைகொள் பூசலிற் புகன்ற வாயம்
முழவிமிழ் மூதூர் விழவுக்காணுஉப் பெயருஞ்
செழும்பல் வைப்பிற் பழனப்பாலும்
ஏனல் உழவர் வரகுமீ திட்ட
காண்மிகு குளவிய வன்புசே ரிருக்கை
மென்றினை நுவணை முறைமுறை பகுக்கும்
புன்புலந் தழீஇய புறவணி வைப்பும்
பல்பூஞ் செம்மற் காடுபய மாறி
யரக்கத் தன்ன நுண்மணற் கோடுகொண்
டொண்ணுதல் மகளிர் கழலொடு மறுகும்
விண்ணுயர்ந் தோங்கிய கடற்றவும் பிறவும்
பணைகெழு வேந்தரும் வேளிரு மொன்றுமொழிந்து
கடலவுங் காட்டவு மரண்வலியார் நடுங்க
முரண்மிகு கடுங்குரல் விசும்படை பதிரக்
கடுஞ்சினங் கடாஅய் முழங்கு மந்திரத்
தருந்தெறன் மரபிற் கடவுட் பேணிய
ருயர்ந்தோ னேந்திய வரும்பெறற் பிண்டங்
கருங்கட் பேய்மகள் கைபுடையூஉ நடுங்க
நெய்த்தோர் தூஉய நிறைமகி ழிரும்பலி
யெறும்பு மூசா விறும்பூது மரபிற்
கருங்கட் காக்கையொடு பருந்திருந் தார
வோடாப் பூட்கை யொண்பொறிக் கழற்காற்
பெருஞ்சமந் ததைந்த செருப்புகன் மறவ
ருருமுநில னதிர்க்குங் குரலொடு கொளை புணர்ந்து
பெருஞ்சோ றுகுத்தற் கெறியுங்
கடுஞ்சின வேந்தேநின் றழங்குகுரன் முரசே’’ 
                                  (பதிற்றுப்.30)

என வரும்.

இது பதிற்றுப்பத்து.

‘துறை’ எனவே கள்ளும் பாகும் முதலியனவும் அப்பாற் படும்.

‘‘வெள்ளை வெள்யாட்டுச் செச்சை போலத்
தன்னோ ரன்ன விளைய ரிருப்பப்
பலர்மீது நீட்டிய மண்டையென் சிறுவனைக்
கால்கழி கட்டிலிற் கிடப்பித்
தூவெள் ளறுவை போர்ப்பித் திலதே.’’      (புறம்.286)

‘‘உண்டியின் முந்தா துடனுண்பான் றண்டேறன்
மண்டி வழங்கி வழீஇயதற்கோ - கொண்டி
மறவர் மறமிக் குயிர்நேர்ந்தார் மன்னர்க்
குறவிலர் கண்ணோடா தோர்ந்து’’

என்பன கொள்க.

வென்றோர்     விளக்கமும்    -    அங்ஙனம்    பிண்டமேய
இருபெருவேந்தருள்  ஒருவர்  ஒருவர்  மிகை கண்டு அஞ்சிக் கருமச்
சூழ்ச்சியாற்றிறைகொடுப்ப    அதனை    வாங்கினார்க்கு  உளதாகிய
விளக்கத்தைக் கூறலும்;

உ-ம்:

‘‘அறாஅ யாண ரகன்கட் செறுவி