பிறவெந்திரங்களும்
பொருந்த இயற்றப்பட்டதாம்.
இனி, மலையரணும்
நிலவரணுஞ், சென்று சூழ்ந்து நேர்தலில்லா ஆரதர்
அமைந்தனவும் இடத்தியற்றிய மதில்போல்
அடிச்சிலம்பின் அரணமைந்தனவும் மீதிருந்து
கணை சொரியும் இடமும் பிறவெந்திரங்களும் அமைந்தனவாம். இனிக் காட்டரணும் நீரரணும் அவ்வாறே வேண்டுவன யாவும் அமைந்தனவாம். இங்ஙனம் அடைத்திருத்தலும் அவனைச் சூழ்ந் தழித்தலும் கலியூழிதோறும் பிறந்த சிறப்பில்லா அரசியலாதலின் இது வஞ்சமுடைத்தாயிற்று.
சிறப்புடை
அரசியலாவன, மடிந்த
உள்ளத்தோனையும்
மகப்பெறாதோனையும்
மயிர்
குலைந்தோனையும்
அடிபிறக்கிட்டோனையும் பெண்பெயரோனையும்
படையிழந்தோனையும்
ஒத்தபடை யெடாதோனையும் பிறவும் இத்தன்மையுடையோரையுங்
கொல்லாது விடுதலுங், கூறிப் பொருதலும் முதலியனவாம்.
இனி ‘ஆகு’மென்றதனான் எதிர்சென்ற வேந்தன் பொருது தோற்றுச் சென்று
அடைத்திருத்தலும் உழிஞையாம். மற்றை வேந்தன் வளையாது மீளின் அவனடைத்தது உழிஞையாகா தென்றுணர்க. (10)
உழிஞை எட்டுத் துறைத்து
ஆதல்
|