நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   2396
Zoom In NormalZoom Out


கூறி அஃது அழித்தற்கு விருப்பஞ் செய்தலும்;

உ-ம்:

‘‘இற்றைப் பகலு ளெயிலகம் புக்கன்றிப்
பொற்றாரான் போனகங்கைக் கொள்ளானா - லெற்றாங்கொ
லாறாத வெம்பசித்தீயாற வுயிர்பருகி
மாறா மறலி வயிறு’’                 (புறத்திரட்டு.1927)

என வரும்.

‘‘மறனுடை மறவர்க் கேறவிட னின்றி
நெய்யோ டையவி யப்பியெவ் வாயு
மெந்திரப் பறவை யியற்றின நிறீஇக்
கல்லுங் கவணும் கடுவிசைப் பொறியும்
வில்லும் கணையும் பலபடப் பரப்பிப்
பந்தும் பாவையும் பசுவரிப் புட்டிலு
மென்றிவை பலவுஞ் சென்றுசென் றெறியு
முந்தை மகளிரை யியற்றிப் பின்றை
யெய்பெரும் பகழி வாயிற் றூக்கிச்
சுட்டல் போயின் றாயினும் வட்டத்
தீப்பாய் மகளிர் திகழ்நலம் பேர
நோக்குநர் நோக்குநர் நொந்துகை விதிர்க்குந்
தாக்கருந் தானை யிரும்பொறை
பூக்கோட் டண்ணுமை கேட்டொறுங் கலுழ்ந்தே’’
                               
(தகடூர் யாத்திரை)

இப் பொன்முடியார் பாட்டும் அது.

இதனாற் பூச்சூடுதல் பெற்றாம்.

தோலின்  பெருக்கமும்   -   அங்ஙனம்  மதின்மேற்   சென்றுழி
மதிலகத்தோர்  அப்புமாரி விலக்குதற்குக் கிடுகுங் கேடகமும் மிடையக்
கொண்டுசேறலும்;

உ-ம்:

‘‘இருசுட ரியங்காப் பெருமூ திலங்கை
நெடுந்தோ ளிராமன் கடந்த ஞான்றை
யெண்கிடை மிடைந்த பைங்கட் சேனையிற்
பச்சை போர்த்த பல்புறத் தண்டை
யெச்சார் மருங்கினு மெயிற்புறத் திறத்தலிற்
கடல்சூ ழரணம் போன்ற
துடல்சின வேந்தன் முற்றிய வூரே’’

       (ஆசிரியமாலை,புறத்திரட்டு,எயில் கோடல்.1334)

என வரும்.

‘‘நின்ற புகழொழிய நில்லா வுயிரோம்பி
யின்றுநாம் வைக லிழிவாகும் - வென்றொளிரும்
பாண்டி னிரைதோற் பணியார் பகையரணம்
வேண்டி லெளிதென்றான் வேந்து’’ 
                           (புற. வெ. உழிஞை.12)

இதுவும் அது.

அரணத்தோர்  தத்தம்   பதணத்து   நிற்றலிற்  றோல் கூறிற்றிலர்

இந்நான்கும் முற்றுவோர்க்கே உரியவெனக் கொள்க.

அகத்தோன் செல்வமும் - அகத்து உழிஞையோன் குறை வில்லாத
பெருஞ்செல்வங் கூறுதலும்;

அவை    படை   குடி   கூழ்   அமைச்சு   நட்பும்   நீர்நிலையும்
ஏமப்பொருள் மேம்படு பண்டங்களும் முதலியனவாம்.

உ-ம்:

‘‘பொருசின மாறாப் புலிப்போத் துறையு
மருவரை கண்டார்போ லஞ்சி யொருவருஞ்
செல்லா மதிலகத்து வீற்றிருந்தான் றேர்வேந்த
னெல்லார்க்கு மெல்லாங் கொடுத்து’’

      (தகடூர்யாத்திரை.புறத்திரட்டு.1339.எயில் காத்தல் 5)

‘‘அளிதோ தானே பாரியது பறம்பே
நளிகொண் முரசின் மூவிரு முற்றினு
முழவ ருழாதன நான்குபய னுடைத்தே
யொன்றே, சிறியிலை வெதிரின் நெல்விளை யும்மே
இரண்டே, தீஞ்சுளைப் பலவின் பழமூழ்க் கும்மே
மூன்றே, கொழுங்கொடி வள்ளிக் கிழங்குவீழ்க் கும்மே,
நான்கே,அணிநிற வோரி பாய்தலின் மீதழிந்து
திணிநெடுங் குன்றந் தேன்சொரி யும்மே
வான்க ணற்றதன் மலையே வானத்து
மீன்க ணற்றவன் சுனையே யாங்கு
மரந்தொறும் பிணித்த களிற்றினி ராயினும்
புலந்தொறும் பரப்பிய தேரினி ராயினுந்
தாளிற் கொள்ளலிர் வாளிற் றாரலன்
யானறி குவனது கொள்ளு மாறே
சுகிர்புரி நரம்பின் சீறியாழ் பண்ணி
விரையொலி கூந்தனும் விறலியர் பின்வர
ஆடினிர் பாடினிர் செலினே
நாடுங் குன்று மொருங்கீ யும்மே’’
            (புறம்.109)

என்னும் புறப்பாட்டும் அது.

அன்றி  முரணிய   புறத்தோன்  அணங்கிய பக்கமும் - மாறுபட்ட
புறத்தோனை     அகத்தோன்    தன்    செல்வத்தான்    அன்றிப்
போர்த்தொழிலான் வருத்