ணையாகிய
அரசனையாயினுந் தன் படைத்தலைவரையாயினும்
ஏவி அகத்து வேந்தர்க்குத் துணையாகிய
அரசனது முழு முதலரண் முற்றிலும் அவன்றா னதனைக் காவல் கோடலும் நிகழ்ந்தவிடத்தும் இவ் விருநான்கு வகையும் இருவர்க்கு
முளவாதலாம்.
உதாரணம்
முற்காட்டியவே; வேறு வேறு காட்டினும்
அமையும். இத்திணைக்குப் ‘படையியங்கரவ’
(புறம்.8) முதலியனவும் அதிகாரத்தாற் கொள்க. அது,
‘‘இலங்குதொடி மருப்பிற் கடாஅம் வார்த்து நிலம்புடையூஉ வெழுதரும் வலம்படு குஞ்சர மெரியவிழ்ந் தன்ன விரியுளை சூட்டிக் கால்கிளர்ந் தன்ன கடுஞ்செல லிவுளி கோன்முனைக் கொடியினம் விரவா வல்லோ டூன்வினை கடுக்குந் தோன்றல பெரிதெழுந் தருவியி னொலிக்கும் வரிபுனை நெடுந்தேர் கண்விட் டனவே முரசங் கண்ணுற்றுக் கதித்தெழு மாதிரங் கல்லென வொலிப்பக் கறங்கிசை வயிரொடு வலம்புரி யார்ப்ப நெடுமதி னிரைஞாயிற் கடிமிளைக் குண்டுகிடங்கின் மீப்புடை யாரரண் காப்புடைத் தேஎ நெஞ்சுபுக லழிந்து நிலைதளர் பொரீஇ யொல்லா மன்னர் நடுங்க நல்ல மன்றவிவண் வீங்கிய செலவே’’
(பதிற்றுப்பத்து)
என வரும்.
இனித்
தேவர்க்குரியவாக உழிஞையிற்றுறைகள்
பலவுங் கூறுவாருளராலெனின், அவை உலகியலாகிய அரசியலாய் எஞ்ஞான்றும் நிகழ்வின்றி ஒருகால் ஒருவர் வேண்டியவாறு செய்வன வாகலின்
‘தமிழ் கூறு நல்லுலகத்’தன (தொல்.பாயிரம்) அல்லவென மறுக்க. இனி முரசழிஞை வேண்டுவா ருளரெனின் முரசவஞ்சியுங் கோடல் வேண்டுமென மறுக்க.
இனி ஆரெயிலுழிஞை
முழுமுதலரணம் என்றதன்கண் அடங்கும்.
இனி இவற்றின்
விகற்பிப்பன வெல்லாம் அத் துறைப்பாற்படுத்திக்
கொள்க.
உழிஞை வேந்தர் இருவர்க்கும் பொதுவாம்
துறைகள்
|