நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   3198
Zoom In NormalZoom Out


திரிமருப் பிரலை
வார்மண லொருசிறைப் பிடவவிழ் கொழுநிழற்
காமர் துணையோ டமர்துயில் வதிய
அரக்குநிற வுருவின் ஈயர் மூதாய்
பரப்பி யவைபோற் பாஅய்ப் பலவுடன்
நீர்வார் மருங்கி னீரணி திகழ
இன்னும் வாரா ராயின் நன்னுதல்
யாதுகொல் மற்றவர் நிலையே காதலர்
கருவிக் காரிடி யிரீஇய
பருவ மன்றவர் வருதுமென் றதுவே’’
        (அகம்.139)

இது பிரிவிடையாற்றாது தோழிக்கு உரைத்தது.

இம்  மணிமிடைபவளத்துப் பாலைக்கண் முன்பனியும் வைகறையும்
ஒருங்கு வந்தன.

‘‘தொல்லெழில் வரைத்தன்றி வயவுநோய் நலிதலி
னல்லாந்தா ரலவுற வீன்றவள் கிடக்கைபோற்
பல்பய முதலிய பசுமைதீ ரகன்ஞாலம்
புல்லிய புனிறொரீஇப் புதுநல மேர்தர
வளையவர் வண்டல்போல் வார்மணல் வடுக்கொள
விளையவ ரைம்பால்போ லெக்கர்போழ்ந் தறல்வார
மாவீன்ற தளிர்மிசை மாயவ டிதலைபோ
லாயிதழ்ப் பன்மல ரையகொங் குறைத்தர
மேதக விளவேனி லிறுத்தந்த பொழுதின்கண்;

இது தரவு.


சேயார்கட் சென்றவென் னெஞ்சினைச் சின்மொழி
நீகூறும் வரைத்தன்றி நிறுப்பென்மன் னிறைநீவி
வாய்விரியு பனியேற்ற விரவுப்பன் மலர்தீண்டி
நோய்சேர்ந்த வைகலான் வாடைவந் தலைத்தரூஉம்;


போழ்துள்ளார் துறந்தார்கட் புரிவாடுங் கொள்கையைச்
சூழ்பாங்கே சுடரிழாய் கரப்பென்மற் கைநீவி
வீழ்கதிர் விடுத்தபூ விருந்துண்ணு மிருந்தும்பி
யாழ்கொண்ட விமிழிசை யியன்மாலை யலைத்தரூஉம்;
தொடிநிலை நெகிழ்த்தார்கட் டோயுமென் னாருயிர்
வடுநீங்கு கிளவியாய் வலிப்பென்மன் வலிப்பவு
நெடுநிலாத் திறந்துண்ண நிரையிதழ் வாய்விட்ட
கடிமலர் கமழ்நாற்றங் கங்குல்வந் தலைத்தரூஉம்;

இவை மூன்றுந் தாழிசை.

எனவாங்கு, இது தனிச்சொல்.

வருந்தினை வதிந்தநின் வளைநீங்கச் சேய்நாட்டுப்
பிரிந்துசெய் பொருட்பிணி பின்னோக்கா தெய்தி நம்
அருந்துயர் களைஞர் வந்தனர்
திருந்தெயி றிலங்கு