நின் றேமொழி படர்ந்தே’’
(கலி.29) இது சுரிதகம். இஃது ஒத்தாழிசை. வந்தாரென ஆற்றுவித்தது. இதில் வேனிலும் வாடையுங் கங்குலும் மாலையும் வந்தன. ‘‘அம்ம வாழி தோழி சிறியிலைக் குறுஞ்சினை வேம்பி னறும்பழ முணீஇய வாவ லுகக்கு மாலையு மின்றுகொல் காதலர் சென்ற நாட்டே’’
(ஐங்குறு.339) இவ் ஐங்குறுநூறு பாலைக்கண் மாலை வந்தது. ‘‘தண்கடற் சேர்ப்பன் பிரிந்தெனப் பண்டையிற் கடும்பகல் வருதி கையறு மாலை கொடுங்கழி நெய்தலுங் கூம்பக் காலை வரினுங் களைஞரோ விலரோ’’
(ஐங்குறு.183) பருவ
வரவின்கண் மாலைப்பொழுது கண்டு ஆற்றாளாய தலைவி தோழிக்குக் கூறியது. இவ் ஐங்குறுநூறு நெய்தற்கண் மாலை வந்தது. ‘‘தொல்லூழி தடுமாறித் தொகல்வேண்டும் பருவத்தாற் பல்வயி னுயிரெல்லாம் படைத்தான்கட் பெயர்ப்பான்போ லெல்லுறு தெறுகதிர் மடங்கித்தன் கதிர்மாய நல்லற நெறிநிறீஇ யுலகாண்ட வரசன்பி னல்லது மலைந்திருந் தறநெறி நிறுக்கல்லா மெல்லியான் பருவம் போன் மயங்கிரு டலைவர வெல்லைக்கு வரம்பாய விடும்பைகூர் மருண்மாலை பனியிருள் சூழ்தரப் பைதலஞ் சிறுகுழ லினிவரி லுயருமற் பழியெனக் கலங்கிய தனியவ ரிடும்பைகண் டினைதியோ வெம்போல வினியசெய் தகன்றாரை யுடையை யோநீ’’
(கலி.129) என நெய்தற்கலியுட் கங்குலும் மாலையும் முன்பனியும் வந்தன. ஒழிந்தனவும் மயங்குமாறு வந்துழிக் காண்க. கைக்கிளையும் பெருந்திணையும் நான்குநிலத்தும் மயங்குதல்
|