மெய்ப்பாடுபற்றியுணர்க. இஃதும் அகம். ‘‘வானமூர்ந்த’’ (11) என்னும் அகப்பாட்டினுள் (அகம்.11) ‘‘மெய்புகு வன்ன கைகவர் முயக்க மவரும் பெறுகுவர் மன்னே’’ எனக் கூறி,
அழுதன் மேவாவாய்க் கண்ணுந் துயிலுமென இரக்கம்மீக் மீக்கூறியவாறு முணர்க. ‘‘குன்றியன்ன’’ (133) என்னும் அகப்பாட்டும் (133) அது. இவை பாலைக்கண் இரங்கல் நிகழ்ந்தன. இங்ஙனம் இச்சூத்திரவிதி உண்மையிற் சான்றோர் அகத்தினுங் கலியினும் ஐங்குறுநூற்றினும் பாலைக்கண்ணே உடன்போக்கு நிகழ்ந்த செய்யுட்களைக் கோத்தாரென் றுணர்க. இல்லிருந்து
செந்தீயோம்பல் வேளாளர்க்கு இன்மையிற் ‘கொண்டு தலைக்கழிதல்’ அவர்க்கு உரியதாயிற்று. ஒழிந்த
மூன்று வருணத்தோருந் தமக்கு உரிய பிரிவின்கட் செந்தீ யோம்புவாரை நாட்டிப் பிரிப; ஆகலான், அவர்க்கு ஏனைப் பிரிவுகள் அமைந்தன. இதனைக்
‘‘கொடுப்போ ரின்றியுங் கரண முண்டே’’ (143)
எனக் கற்பியலிற் கரணம் வேறாகக் கூறுமாறுஆண்டுணர்க.
‘‘வேர்முழுதுலறி நின்ற’’ (145) என்னும் மணிமிடைபவளத்துட்
கூழுடைத் தந்தையிடனுடை வரைப்பி, னூழடி யொதுங்கினு முயக்கும்
‘‘எனவுங் கிளியும் பந்தும்’’ (49) என்னும் களிற்றியானை நிரையுள்,
‘‘அல்குபத மிகுந்த கடியுடை வியனகர்’’ எனவும், நெல்லுடைமை கூறிய அதனானே வேளாண் வருணமென்பது பெற்றாம். பாலைக்கட் குறிஞ்சி மயங்குதல்
|