நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   3251
Zoom In NormalZoom Out


கண்டிசின் வாழியோ குறுமகள் நுந்தை
அடுகளம் பாய்ந்த தொடிசிதை மருப்பிற்
பிடிமிடை களிற்றின் தோன்றுங்
குறுநெடுந் துணைய குன்றமும் உடைத்தே’’   
(அகம்.99)

இவ் வகப்பாட்டுத் தலைவியை மருட்டிக் கூறியது.

‘‘உயர்கரைக் கானியாற் றவிரற லகன்றுறை
வேனிற் பாதிரி விரைமலர் குவைஇத்
தொடலை தைஇய மடவரல் மகளே
கண்ணினுங் கதவநின் முலையே
முலையினுங் கதவநின் றடமென் றோளே’’ 
(ஐங்குறு.361)

இவ்   வைங்குறுநூறு   உடன்போயவழித் தலைவன்  புகழ்ச்சிக்கு
நாணித் தலைவி கண்புதைத்துழி அவன் கூறியது.

‘‘அழிவில முயலு மார்வ மாக்கள்
வழிபடு தெய்வங் கட்கண் டாஅங்
கலமரல் வருத்தந் தீர யாழநின்
னலமென் பணைத்தோ ளெய்தின மாகலிற்
பொரிப்பூம் புன்கி னெழிற்றகை யொண்முறி
சுணங்கணி வனமுலை யணங்குகொளத் திமிரி
நிழல்காண் டோறு நெடிய வைகி
மணல்காண் டோறும் வண்ட றைஇ
வருந்தா தேகுமதி வாலெயிற் றோயே
மாநனை கொழுதி மகிழ்குயி லாலும்
நறுந்தண் - பொழில கானங்
குறும்பல் லூரயாஞ் செல்லு மாறே’’           
(நற்.9)

என  வரும்.  இது  புணர்ச்சி  மகிழ்ந்தபின்  வழிவந்த நன்மை கூறி
வருந்தாது ஏகென்றது. இது நற்றிணை.

பிறவும் வேறுபட வருவனவெல்லாம் இதனான் அமைக்க.

‘‘இரும்புலிக் கிரிந்த கருங்கட் செந்நாகு
நாட்டயிர் கடைகுரல்கேட்டொறும் வெரூஉம்
மாநிலைப் பள்ளி யல்க நம்மொடு
மானுண் கண்ணியும் வருமெனின்
வாரார் யாரோ பெருங்க லாறே’’

இது விடுத்தற்கட் கூறியது.

‘‘வினையமை பாவையி னியலி நுந்தை
மனைவரை யிறந்து வந்தனை யாயிற்
றலைநாட் கெதிரிய தண்பத வெழிலி
யணிமிகு கானத் தகன்புறம் பரந்த
கடுஞ்செம் மூதாய் கண்டுங் கொண்டும்
நீவிளை யாடுக சிறிதே யானே
மழகளி றுரிஞ்சிய பராரை வேங்கை
மணலிடு மருங்கி னிரும்புறம் பொருந்தி
யமர்வரி னஞ்சேன் பெயர்க்குவெ
னுமர்வரி