நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   3254
Zoom In NormalZoom Out


யாமுறு துயரமவ ளறியினோ நன்றே’’      (ஐங்குறு.441)

இது  வினைமுடியாமையிற்  பருவங்கண்டு மீளப்பெறாத தலைவன்
தூதர்  வார்த்தை  கேட்டு  வருந்தியது.  பிறவும்  வேறுபட வருவன
கொள்க.

‘‘முரம்புகண் ணுடையத் திரயுந் திகிரியொடு
பணைநிலை முனைஇய வயமாப் புணர்ந்து
திண்ணிதின் மாண்டன்று தேரே
யொண்ணுதற் காண்குவம் வேந்துவினை விடினே’’
                                  
(ஐங்குறு.449)

இது   வேந்தன் திறைகொண்டு மீள்வுழித் தானுஞ் சமைந்த தேரை
அழைத்துக்கண்டு  ‘திண்ணிதின்  மாண்டன்று தே’ ரெனப் பாகனொடு
கூறியவழி  அவ்வேந்தன்  திறைவாங்காது  வினைமேற் சென்றானாகப்
பாகனை  நோக்கிக்   கூறியது.  இவை  ஐங்குறுநூறு.  ‘‘மலைமிசைக்
குலைஇய’’
  என்னும்  (84)  அகப்பாட்டும்  அது.  கலித்தொகையுட்
‘‘புத்தியானை     வந்தது    காண்பான்   யான்  றங்கினேன்’’
(மருதக்கலி.32)  என்பன  முதலியவற்றான்  யானை முதலியவற்றையுங்,
கடவுட்பாட்டான் (மருதக் கலி.28) தாபதரையுங் காத்தற்குப்   பிரிந்தே
னெனக் கூறினானென்பது பெற்றாம்.

‘‘ஒரூஉக், கொடியிய னல்லார் குரனாற்றத் துற்ற
முடியுதிர் பூந்தாது மொய்ம்பின வாகத்
தொடிய வெமக்குநீ யாரை பெரியார்க்
கடியரோ வாற்றா தவர்;
கடியர் தமக், கியார்சொல்லத் தக்காரா மாற்று;
வினைக்கெட்டு, வாயல்லா வெண்மை யுரையாது கூறுநின்
மாய மருள்வா ரகத்து;
ஆயிழாய், நின்கண் பெறினல்லா லின்னுயிர் வாழ்கல்லா
வென்க ணெவனோ தவறு;
இஃதொத்தன், புள்ளிக்கள்வன் புனல்சேர் பொதுக்கம்போல்
வள்ளுகிர் போழ்ந்தனவும் வாளெயி றுற்றனவு
மொள்ளிதழ் சோர்ந்தநின் கண்ணியு நல்லார்
சிரறுபு சீறச் சிவந்தநின் மார்புந்
தவறாதல் சாலாவோ