அமைத்துக்கொள்க. இனி, ‘‘அளிநிலை பொறாஅ தமரிய முகத்தள் விளிநிலை கொள்ளாள் தமியள் மென்மெல நலமிகு சேவடி நிலம்வடுக் கொளாஅக் குறுக வந்துதன் கூரெயிறு தோன்ற வறிதகத் தெழுந்த வாயல் முறுவலள் கண்ணிய துணரா அளவை யொண்ணுதல் வினைதலைப் படுதல் செல்லா நினைவுடன் முளிந்த ஓமை முதையலங் காட்டுப் பளிங்கத் தன்ன பல்காய் நெல்லி மோட்டிரும் பாறை ஈட்டுவட் டேய்ப்ப உதிர்வன படூஉம் கதிர்தெறு கவாஅன் மாய்த்த போல மழுகுநுனை தோற்றிப் பாத்தி யன்ன குடுமிக் கூர்ங்கல் விரனுதி சிதைக்கு நிரைநிலை அதர பரன்முரம் பாகிய பயமில் கானம் இறப்ப வெண்ணுதி ராயி னறத்தா றன்றென மொழிந்த தொன்றுபடு கிளவி அன்ன வாக என்னுநள் போல முன்னங்காட்டி முகத்தின் உரையா ஓவச் செய்தியின் ஒன்றுநினைந் தெற்றிப் பாவை மாய்த்த பனிநீர் நோக்கமொ டாகத் தொடுக்கிய புதல்வன் புன்றலைத் தூநீர் பயந்த துணையமை பிணையல் மோயின ளுயிர்த்த காலை மாமலர் மணியுரு விழந்த அணியழி தோற்றம் கண்டே கடிந்தனஞ் செலவே ஒண்தொடி யுழையம் ஆகவும் இனைவோள் பிழையலள் மாதோ பிரிதுநாம் எனினே.’’
(அகம்.5) ‘‘இருங்கழி முதலை மேந்தோ லன்ன...ஞான்றே.’’ (அகம்.3) இவை அகம்: ‘‘வேர்பிணி வெதிரத்துக் கால்பொரு நரலிசை கந்துபிணி யானை யயாவுயிர்த் தாஅங் கென்றூழ் நீடிய வேய்பயி லழுவத்துக் குன்றூர் மதிய நோக்கி நின்றுநினைந் துள்ளினெ னல்லனோ யானே முள்ளெயிற்றுத் திலகந் தைஇய தேங்கமழ் திருநுத லெமது முண்டோர் மதிநாட் டிங்க ளுரறு
|