இது
மரபியலுட் கூறப்படும் மரபன்றி அகத்திணைக்கு உரிய மரபுகள் கூறுகின்றது. (இ-ள்.)
மரபுநிலை திரியா மாட்சிய ஆகி - புலனெறி வழக்கஞ் செய்துவருகின்ற வரலாற்று முறைமை திரியாத மாட்சியவாகி; விரவும் பொருளும் விரவும் என்ப - பாலைத் திணைக்குங் கைக்கிளை பெருந் திணைக்கும் உரியவாய் விரவும் பொருளும் ஏனைத் திணைக்கும் உரியவாய் விரவும் பொருளும் விரவி வருமென்று கூறுவர் புலவர் எ-று. அவை
தலைவி ஆற்றாமை கண்டுழிப் பிரிந்த தலைவன் மீண்டு வந்தானெனத் தோழி கூறுவனவும், வரைவிடை வைத்துப் பிரிந்தோன் தலைவியை நினைந்து வருந்திக் கூறுவனவும், உடன் போயவழி இடைச்சுரத்து நிகழ்ந்ததனை மீண்டும் வந்துழித் தலைவன் றோழிக்குக் கூறுவனவும், யானினைத்த வெல்லை யெல்லாம் பொருள் முடித்து வாராது நின்னல நயந்து வந்தேனெனத் தலைவன் கூறலும், பொருள்வயிற் பிரிந்தோன் தலைவியை நினைந்து வருந்துவனவும், இடைச்சுரத்துத் தலைவன் செலவு கண்டோர் கூறுவனவும், அவன் மீட்சி கண்டோர் கூறுவனவும், ஊரின்கட் கண்டோர் கூறுவனவும் பிறவுமாம். அவை பாலைத் திணைக்கு விரவும் பொருளாமென்றுணர்க. உ-ம்: ‘‘கோடுயர் பன்மலை யிறந்தன ராயினு நீட விடுமோ மற்றே நீடுநினைந்து துடைத்தொறுந் துடைத்தொறுங் கலங்கி யுடைத்தரும் வெள்ள மாகிய கண்ணே’’
(ஐங்குறு.358) இவ்
வைங்குறுநூறு தலைவன் மீண்டானென்றது. ‘‘பாடின்றிப் பசந்தகண்’’ (பாலைக்கலி.16) என்பதும் அது. ‘‘வளைபடு முத்தம் பரதவர் பகருங்
|