நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   3275
Zoom In NormalZoom Out


வே      ஆய்ச்சியர்    குரவைக்கூத்தல்லது    வேட்டுவவரிக்குரிய
வெறியாடல் விரவாதென்றுணர்க. இஃது எண்வகைச் சுவையான் வரும்
மெய்ப்பாடுங்   கூத்தொடும்   படுதலின்   அச்சுவை   பற்றி  வரும்
மெய்ப்பாட்டிற்கும் உரித்தாயிற்று.

இனிக் ‘காவற்பாங்டிகின் ஆங்கோர் பக்கத்’தின் (தொல்.பொ.41)
தலைவன்  கூறியவற்றைக்  கற்பியலுள்,  தலைவன்  பகுதியி னீங்கிய
தகுதிக்கட்’ (தொல். பொ. கற். 9) டலைவி பரத்தையராகக் கூறுவனவும்
இச்சூத்திரத்தான்  அமைக்க. அவை  மருதக்கலியுட்  ‘கடவுட்பாட்டு’
முதலியன.  (கலி.  93,  95,  96,  97) அவற்றை ஆண்டுக் காட்டுதும்;
கண்டுணர்க.

இனித் தலைவி கற்பினுட் பிரிவாற்றாது எம்மையும் உடன் கொண்டு
சென்மினென்பனவும்,   அவன்   அவட்கு   மறுத்துக்  கூறுவனவும்
இதனான் அமைக்க.

உ-ம்:

‘‘மரையா மரல்கவர மாரி வறப்ப
வரையோங் கருஞ்சுரத் தாரிடைச் செல்வோர்
சுரையம்பு மூழ்கச் சுருங்கிப் புரையோர்த
முண்ணீர் வறப்பப் புலர்வாடு நாவிற்குத்
தண்ணீர் பெறாஅத் தடுமாற் றருந்துயரங்
கண்ணீர் நனைக்குங் கடுமைய காடென்றா
லென்னீ ரறியாதீர் போல விவைகூறி
னின்னீர வல்ல நெடுந்தகா யெம்மையு
மன்பறச் சூழாதே யாற்றிடை நும்மொடு
துன்பந் துணையாக நாடி னதுவல்ல
தின்பமு முண்டோ வெமக்கு’’
                (கலி.6)

இக் கலி எம்மையும் உடன் கொண்டு சென்மினென்றது.

‘‘செருமிகு சினவேந்தன்’’ என்னும் பாலைக்கலியுள்,

‘‘எல்வளை யெம்மொடு நீவரின் யாழநின்
மெல்லியன் மேவந்த சீறடித் தாமரை
யல்லிசே ராயித ழரக்குத்தோய்ந் தவைபோலக்
கல்லுறி னவ்வடி கறுக்குந வல்லவோ’’
          (கலி.13)

இது  தலைவிக்குத்  தலைவன்  உடன் போக்கு மறுத்துக் கூறியது.
இதன் சுரிதகத்து,

‘‘அனையவை காதலர் கூறலின் வினைவயிற்
பிரிகுவ ரெனப்பெரி தழி