க்கிழத்தியும் உள்ளுறையுவமங் கூறினாள். குறிஞ்சியிலும்
மருதத்திலும் நெய்தலிலும் இவ்வாறு வரும் கலிகளும், ‘‘யானே ஈண்டை யேனே யென்னலனே யேனல் காவலர் கவணொடு வெரீஇக் கான யானை கைவிடு பசுங்கழை மீனெறி தூண்டிலி னிவக்கும் கானக நாடனோ டாண்டொழிந் தன்றே’’
(குறுந்.54) என்னும் இக் குறுந்தொகைபோல வருவனவும் இச் சூத்திரத்தான் அமைக்க. பேராசிரியரும் இப்பாட்டின் ‘மீனெறி தூண்டி’லென்றதனை ஏனையுவமமென்றார். இனித் தள்ளாதென்றதனானே,
‘‘பாஅ லஞ்செவி’’ என்னும் பாலைக்கலியுட் (5) டாழிசை மூன்றும் ஏனையுவமமாய் நின்று கருப்பொருளொடு கூடிச் சிறப்பியாது தாமே திணைப் பொருள் தோன்றுவித்து நிற்பன
போல்வனவுங், ‘‘கரைசேர் வேழங் கரும்பிற் பூக்குந்
துறைகே ழூரன்’’ (ஐங்குறு.12) என்றாற் போலக் கருப்பொருள் தானே உவமமாய் நின்று உள்ளுறைப் பொருள் தருவனவும், பிறவும் வேறுபட வருவனவும் இதனான் அமைக்க. இது புறத்திற்கும் பொது. இதனான் உள்ளுறையுவமமும், ஏனையுவமமு மென உவமம் இரண்டே யென்பது கூறினார். (46) உள்ளுறையுவமம் தெய்வம் நீங்கலான ஏனைய கருப்பொருளிடமாகப் பிறத்தல்
|